வரைவு வாக்காளர் பட்டியல் -2020 இன்று வெளியீடு


2021 சட்டமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தின் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று காலை வெளியிடப்படுகிறது. வரைவு வாக்காளர் பட்டியலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வெளியிடுகிறார்.

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் 2021 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற உள்ளது. இதற்கான ஆயத்தப் பணிகளில் பல்வேறு கட்சிகள் களமிறங்கியுள்ள நிலையில் தேர்தல் ஆணையமும்  தமிழ்க சட்டப்பேரவை தேர்தலுக்கு தயாராகி வருகிறது.

 இன்று காலை 10.30 மணியளவில் சட்டமன்ற தொகுதி வாரியாக வரைவு வாக்காளர் பட்டியலை அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகள் வெளியிட உள்ளனர்.
 
இந்த வரைவு வாக்காளர் பட்டியலில் வாக்காளர்  பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய விண்ணப்பிக்கலாம். 

பொதுமக்கள் எளிமையாக அணுகும் வகையில் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். இதன் மூலம் வாக்காளர்கள் , வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யப்பட வேண்டி விண்ணப்பித்துக் கொள்ளலாம்.  

சிறப்பு முகாம் நடைபெறும் நாட்கள் & இடம் 

இடம்- வாக்காளர் வாக்கு சாவடி மையம் 
நவம்பர் 21, 22 
டிசம்பர் 12, 13 

விண்ணப்பிக்க கடைசி நாள் 

டிசம்பர் 15

 ஜனவரி 20இல் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Join Telegram& Whats App Group Link -Click Here