TN MBBS / BDS Rank list  declaration today

மருத்துவ படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியலை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று(நவவம்பர் -16) வெளியிட்டார் . 

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில் MBBSபடிப்பில்  4061   இடங்கள் உள்ளன.  BDS  படிப்பில் 2000 த்துக்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. 

இந்த இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு இம்மாதம் 3ம் தேதி துவங்கி 12ம் தேதி நிறைவடைந்தது.

MBBS / BDS  படிப்புகளுக்கு 38 ஆயிரம் பேர் வரை விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பித்தோருக்கான தரவரிசை பட்டியலை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று வெளியிட்டார்.

நேரடி கவுன்சிலிங் நவ.18ம் தேதி அல்லது 19ம் தேதி துவங்க உள்ளது. நடப்பாண்டு முதல் அரசு பள்ளி படித்த மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது  இதன் காரணமாக இந்தாண்டு எம்.பி.பி.எஸ். படிப்பில் 304; பி.டி.எஸ். படிப்பில் 91 இடங்கள்   அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு  கிடைக்க வாய்ப்பு உள்ளது.


PROVISIONAL RANK LIST FOR MBBS/BDS 2020 - 2021 SESSION (GOVERNMENT QUOTA ) TAMILNADU GOVT SCHOOL CANDIDATES 7.5% RESERVATION




Join Telegram& Whats App Group Link -Click Here