கல்வி தொலைக்காட்சி  நிகழ்ச்சிகளை மாணவர்கள் பயன்பெறும் வகையில்   நடவடிக்கை எடுக்க பள்ளி தலைமையாசிரியர்களுக்கு உத்தரவு 


கல்வி தொலைக்காட்சி மாணவர்களுக்கு பயன்பெறும் வகையில் கடந்த ஆண்டு ஆகஸ்டு 26-ல் தொடங்கி பாடங்களை வீடியோ வடிவில் பதிவு செய்து  COVID 19 காலங்களில் “வீட்டுப்பள்ளி" நிகழ்ச்சி வாயிலாக ஆகஸ்ட் 26, 2020-ல் மாற்றியமைக்கப்பட்டு கல்வி தொலைக்காட்சி மற்றும் இதர தனியார் தொலைக்காட்சிகள் மூலமாக ஒளிபரப்பு செய்யப்பட்டு சிறப்பாக வருகிறது.

2 முதல் 11 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியர்களுக்கு பாடங்களை எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் பாடங்களை வீடியோ வடிவில் தயாரித்து அதனை கல்வி தொலைக்காட்சியில் பதிவேற்றம் செய்து மாணவர்கள் பயன்படுத்தும் வகையில் குறித்த நேரங்களில் கல்வி தொலைக்காட்சியிலும், இதர 11 தனியார் தொலைக்காட்சிகளிலும் மற்றும் கல்வி தொலைக்காட்சி YOU TUB பதிவேற்றம் செய்யப்பட்டு ஒளிபரப்பு செய்து வருகிறது. இதனை மாணவர்கள் பார்த்து அதில் பலவிதமான கருத்துகளும் கல்வி தொலைக்காட்சிக்கு மின்னஞ்சல் மூலமாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறார்கள்.

தமிழ்நாட்டிலுள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் பள்ளிகளில் பணிபுரியும் அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு, ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களோடு இணைந்து கல்வி தொலைக்காட்சி மற்றும் தனியார் தொலைக்காட்சிகளில் பாடங்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. மேற்காண் பாட நிகழ்ச்சிகளை பார்க்கத் தவறியவர்களின் வசதிக்காக, முதல் நாள் ஒளிபரப்பப்பட்ட பாடங்கள் அனைத்தும் மறுநாள் kalvi Tv  ன் அதிகாரப்பூர்வமான You Tub Channel-w kalvitvofficial.com என்ற முகவரியில் பதிவேற்றம் செய்யப்பட்டு வழங்கப்படுகின்றது.

கல்வித்தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை கொண்டு செல்லும் வகையில், கீழ்க்கண்ட நெறிமுறைகளை பின்பற்றுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்

1. தங்கள் ஆளுகைக்குட்பட்ட அனைத்துப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கல்வித்தொலைக்காட்சியின் ஒளிபரப்பின் முக்கியத்துவத்தையும், COVID 19 காலக்கட்டத்தில் “வீட்டுப்பள்ளி” நிகழ்ச்சி வாயிலாக பாடங்களை கற்பதற்கான அவசியத்தையும் கொண்டு செல்லுதல்.

2. கல்வித் தொலைக்காட்சி மற்றும் தனியார் தொலைக்காட்சிகளான ஏர்டெல் DTH -  Channel Number - 821, SUN DTH - Channel Number - 33, Tata Sky DTH Ch.No.1554, Videocon D2H Ch.No.597, MEGA 24, (SCV)al MAKKAL TV Ch.No. 98,, மதிமுகம் TV, லோட்டஸ் TV, சத்தியம் TV.கேப்டன் TV , வசந்த் TV, ராஜ் TV , புது யுகம் (புதிய தலைமுறை TV) மற்றும்SAHANA] TV(POLIMER TV ) ஒளிபரப்பு செய்வதை தெரியப்படுத்துதல்.

3. கல்வி தொலைக்காட்சி மற்றும் அரசு  TACTV Channel No.200, TCCL Ch.No.200, VK Digital (Polymer) Ch.No. 55, Akshaya Ch.No.17 wim Dish TV Ch.No.597 தெரியப்படுத்துதல்.

4. கல்வி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை அன்றாடம் பார்க்கத்தவறியவர்களின் வசதிக்காக You Tube Channel-s kalvitvofficial- செய்யப்பட்ட பாடங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதை தெரியப்படுத்துதல்.

5. வாராந்திர ஒளிபரப்பு அட்டவணை www.kalvitholaikaatchi.com-வெளியிடபட்டுள்ள தகவல்களை தெரியப்படுத்துதல்.
6. பாட ஆசிரியர்கள் மற்றும் பள்ளி  மாணவர்கள் Kalvitvofficial.Com ,You Tube Channel Sucribe செய்து, பாடங்களை பலமுறை பார்த்து பயன்பெறவும், புதிய பாடங்கள் பதிவேற்றம் செய்த தகவல் பெறுவதற்கும் துணை புரிதல்.

7. You tube Channel  வாயிலாக பதிவேற்றம் செய்த காணொளி காட்சிகளைப் பற்றிய தங்கள் ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களை பதிவு செய்தல். 


எனவே கல்வி தொலைக்காட்சி மற்றும் இதர தொலைக்காட்சி மூலமாக ஒளிபரப்பு செய்யப்படும் நிகழ்ச்சிகளை மாணவர்கள் பயன்பெறும் வகையில் அனைத்து பள்ளி தலைமையாசிரியர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. 

இத்தகவலை உடனடியாக அனைத்து அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்


Join Telegram& Whats App Group Link -Click Here