EER-Register Form 

புதிய கல்விக் கொள்கையின் படி 2 வயது முதல் 18 வரை உள்ளவர்கள் அனைவரும், கட்டாயம் கல்வி நிறுவனங்களில் பயில வேண்டும்.
இதன் படி பார்த்தால் 2 வயது முடிந்த ஒரு குழந்தை Pre KG or Anganwadi யில் கல்வியைத் தொடங்கி, தனது 18 ஆம் வயதில், கல்லூரி முதல் ஆண்டில் பயிலும் வரை கட்டாயம் என வலியுறுத்தப் படுகிறது.
இதை தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள், கண்காணித்து உறுதி செய்வது கட்டாயமாகிறது.

எனவே இதற்கேற்ப EER பதிவேட்டை தயாரித்து வைத்துக் கொள்வது நல்லது.

தங்கள் கணக்கெடுப்பு பகுதிக்கு ஏற்ப,
கீழ்க்கண்டவாறு பக்கங்களை ஒதுக்கீடு செய்வது நல்லது.
1. SC ஆண்
2. SC பெண்
3. ST ஆண்
4. ST பெண்
5. STA ஆண்
6. STA பெண்
7. MBC ஆண்
8. MBC பெண்
9. BC ஆண்
10. BC பெண்
11. BCM ஆண்
12. BCM பெண்
13. 0C ஆண்
14. 0C பெண்
மேற்கண்ட வகையில், தங்கள் கணக்கெடுப்பு பகுதி மக்கள் தொகைக்கேற்ப பக்கங்களை ஒதுக்கீடு செய்து பைண்டிங் செய்து வைத்துக் கொள்வது நல்லது.

இந்த முறையில் தயாரிக்கும் பதிவேடு, புதிய குடியிருப்புப் பகுதி உருவாகாத, கிராமப் புற பள்ளிகளுக்கு பயனளிக்கும்.

புதிய குடியிருப்பு பகுதி உருவாகியுள்ள பள்ளிகள், மாற்றமில்லாத பழைய குடியிருப்புப் பகுதிகளுக்கு ஒன்றும், புதிதாக உருவாகியுள்ள குடியிருப்புப் பகுதிகளுக்கு ஒன்றும் தயாரித்து பயன் படுத்தலாம்.
இதில் மாணவர் ஆதார் எண் மற்றும் EMIS குறிக்கப் படுவதால், நடப்பு கல்வி ஆண்டில் எங்கு பயில்கிறான் என்ற விவரத்தை, தொடக்க / நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் EMIS இணைய தளம் மூலம் கண்டறியலாம்.

மேலும் மாணவர் மாற்றுத் திறனாளியா? 18 வயது முடிவில் என்ன பயன்றுள்ளான் போன்ற விவரங்களை, கல்வித்துறை அலுவலர்கள் கேட்கும் போது துல்லியமாக பதிலளிக்க இயலும்.
இம்முறையில் பதிவேடு தயாரித்து பயன் படுத்தும் போது, ஆசிரியர்களின் EER update பணிச்சுமை வெகுவாக குறையும்.

EER-Register Form In Pdf -


EER-Register Form In Excel  -


30 ஆண்டுகளுக்கான EER பதிவேடு கீழ்க்கண்ட இணையதள இணைப்பில் உள்ளது. தேவைப்படும் ஆசிரியர்கள் பதிவிறக்கம் செய்து, தங்கள் பள்ளி கணக்கெடுப்பு பகுதியின் மாணவர் எண்ணிக்கைக்கேற்ப, நகல் எடுத்து பயன்படுத்தலாம்.


Thank You Mr Lawrence 

Join Telegram& Whats App Group Link -Click Here