ஆன்லைனில் அரையாண்டு தேர்வு ,பாடதிட்டம் குறைப்பு - அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் 

தமிழகத்தில் கடந்த 7 மாத காலமாக பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு பள்ளிகள் இன்னும் திறக்கப்படாமல் உள்ளன. அதேசமயம் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.மேலும் கல்வி தொலைகாட்சி மற்றும் தனியார் தொலைகாட்சி வழியாக பாடம் சார்ந்த  நிழச்சி வழியாக மாணவர்கள் கல்வி கற்றுவருகிறார்கள்.

12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மடிகணிணி வழியாக வீடியோக்கள் பதிவேற்றம் செய்யபட்டு கல்வி கற்று வருகிறார்கள். 

 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நவம்பர் மாதம் 16 பள்ளிகள் திறக்க அரசு முடிவெடுத்த நிலையில், பெற்றோர்களின் கருத்து கேட்பு கூட்டத்தின் சாதகமற்ற பதிலால் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போய்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் அமைச்சர் செங்கோட்டையன், " அரையாண்டு தேர்வுகள் ஆன்லைன் மூலம் நடைபெறும் என்ற தகவல் தவறான தகவல் என்று தொரிவித்துள்ளர். 

 பள்ளிகளில் பாடத்திட்டம் குறைப்பு குறித்து திங்கட்கிழமை 30.11.2020  முதல்வரிடம் அறிக்கை வழங்கப்பட உள்ளது. 5 நாட்களில் பாடத்திட்டங்களை குறைத்து அறிவிப்பு வெளியிடப்படும்  என தெரிவித்தார்.  

ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்ப பெறுவது குறித்து இதுவரை முதல்வரிடம் ஆலோசனை நடத்தவில்லை எனக் கூறினார்


Join Telegram& Whats App Group Link -Click Here