School Mapping Exercise)- 2020-21

பள்ளி வரைபடப் பயிற்சி (School Mapping Exercise)- 2020-21


ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் உள்ள குடியிருப்புகளில் தொடக்க, உயர்தொடக்க, உயர் மற்றும் மேல்நிலை நிலைகளில் உள்ள பள்ளி வசதி நிலைமை Edcil ஆலோசகர்களால் ஆண்டு வரைவு திட்டத்தில்  appraisal செய்யப்படும். அப்போது தமிழகத்தில் உள்ள குடியிருப்புகளில் பள்ளி வசதி சார்ந்து கீழ்காணும் விவரங்கள் சமர்பிக்கப்பட வேண்டும்.

1. மாவட்டங்களில் உள்ள மொத்த குடியிருப்புகளின் எண்ணிக்கை
2. தொடக்க, உயர்தொடக்க, உயர்நிலை, மேல்நிலை நிலைகளில் விதிகளின்படி பள்ளி வசதி உள்ள குடியிருப்புகளின் எண்ணிக்கை.
3. தொடக்க, உயர்தொடக்க, உயர், மேல் நிலைகளில் விதிகளின்படி பள்ளி வசதி இல்லாத குடியிருப்புகளின் எண்ணிக்கை.
4. புதிய பள்ளிகள் தொடங்கிட தகுதியான குடியிருப்புகளின் எண்ணிக்கை மற்றும் அக்குடியிருப்பில் உள்ள பள்ளி வயது குழந்தைகள் எண்ணிக்கை
5 புதிய தொடக்கப் பள்ளிகள் வழங்கிட தகுதியில்லாத குடியிருப்புகளின் எண்ணிக்கை. அக்குடியிருப்புகளில் உள்ள பள்ளி செல்லும் குழந்தைகள் மற்றும் இடைநின்ற குழந்தைகளின் எண்ணிக்கை.
6. தொடக்க மற்றும் உயர்தொடக்க நிலையில் போக்குவாத்து/பாதுகாவலர் வசதி தேவைப்படும் குடியிருப்புகள் விவரம், தொடக்க, உயர்தொடக்க, உயர்நிலை மற்றும் மேல்நிலை உண்டு உறைவிடப்பள்ளிகள் மற்றும் விடுதி வசதி தேவைப்படும் குடியிருப்புகளின் விவரங்கள்.


தொடக்க, உயர்தொடக்க, உயர் மற்றும் மேல் நிலைகளில் பள்ளி வசதி இல்லாத குடியிருப்புகள் விவரம் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி கட்டமைப்பில் கூறியுள்ளவாறு புவியியல் தகவல் முறைமை(GIS) மற்றும் கள ஆய்வு மூலம் 2018-19ம் ஆண்டில் கண்டறியப்பட்டு அனைத்து மாவட்டங்களிலும் மற்றும் வளைதள மையமாகவும் ([tngis.tn.gov.in) பராமரிக்கப்பட்டு வருகிறது. இக்குடியிருப்புகளில் உள்ள குழந்தைகள் 2021-22ஆம் ஆண்டில் பாதுகாப்பாக பள்ளிக்கு செல்ல மேற்கொள்ள வேண்டிய உத்திகள் குறித்த விவரங்கள் மற்றும் மேற்கூறப்பட்ட விவரங்களும் பள்ளி வரைபடப் பயிற்சி மூலம் இவ்வாண்டு பெறப்பட உள்ளது. தொடக்க, உயர்தொடக்க நிலைகளில் இப்பயிற்சி மேற்கொள்வதற்கென ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் கீழ் படிவங்கள்   உருவாக்கப்பட்டு இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. உயர் மற்றும் மேல்நிலைகளில் ஆண்டு வரைவு திட்டதில் சமர்பிக்கப்பட வேண்டிய படிவங்கள் பூர்த்தி செய்ய வேண்டும் 

இணைப்பு 








Join Telegram& Whats App Group Link -Click Here