Computer Instructor Promotion List-2020 For Grade 2 to Grade 1
அரசு/நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் கணினி பயிற்றுநர் நிலை-2 ஆக பணிபுரிபவர்களுக்கு கணினி பயிற்றுநர் நிலை -1 ஆக 12.02.2019 முதல் தரம் உயர்த்தி ஆணை மற்றும் தரம் உயர்த்தபட்ட ஆசிரியர் பட்டியல்
அரசாணை (நிலை) எண்.26, பள்ளிக்கல்வி (ப.க.7(1))த்துறை நாள் 12.02.2019 ல் அரசாணை மூலம் ஏற்கனவே அரசு/நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட கணினி பயிற்றுநர் பணியிடங்கள் கணினி பயிற்றுநர் நிலை -2 ஆக மறு பெயரிட்டு, அவற்றில் பணிபுரிந்து வரும் கணினி பயிற்றுநர்கள் நிலை -2 பணியாளர்களை, NCTE கல்வி தகுதிகளின்படியும் அரசாணை (நிலை)எண்.103 ஆணைகளின்படி (குறைந்தபட்சம் 8 ஆண்டுகள் பணிமுடித்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையின்றி) தகுதிவாய்ந்தோர் விவரங்கள் முதன்மைக் கல்வி அலுவலர்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துருக்கள். விவரப்படி முதன்மைக்கல்வி அலுவலர்களால் அணுப்பப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், கீழ்க்காணும்நிபந்தனைகளுக்கு உட்பட்டு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள இணைப்பில் கண்டவாறு பணியாற்றி வரும் தருதிவாய்ந்த கணினி பயிற்றுநர் நிலை -2 பணியிடங்களை, பார்வை 1 மற்றும் 4 -ல் குறிப்பிடப்பட்டுள்ள அரசாணையின் அடிப்படையில் கணினி பயிற்றுநர்கள் நிலை -1 பணியிடமாக (ரூபாய் 36,900- 1,16,600 என்ற ஊதியம் ஏற்ற முறையில் - (Level -18)) தரம் உயர்த்தி ஆணையிடப்படுகிறது.
மேற்படி பணியிடங்களில் கணினி பயிற்றுநர் நிலை. 2ஆக பணிபுரிந்து வரும் இணைப்பில் கண்ட தருதிவாய்ந்த நபர்களை, அவர்கள் பணிபுரிந்து வரும் அதே பள்ளியில் கணினி பயிற்றுநர்கள் நிலை 1-ஆக அரசு ஆணை(நிலை) எண். 26 பள்ளிக் கல்வி (ப.க.7(1)த் துறை, வெளியிடப்பட்ட நாளான 12.02.2019 முதல் தரம் உயர்த்தி இதன் மூலம் ஆணையிடப்படுகிறது
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..