DSE -  Instructions For NEET  7.5 % Quota  


நீட் (NEET ) நுழைவுத் தேர்வு மதிப்பெண்  அடிப்படையில் அரசுப் பள்ளியில் 6ஆம் வருப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை படித்த மாணவ மாணவிகளுக்கு மருத்துவ படிப்புகளில் 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டில் விண்ணப்பிக்க தமிழ்நாடு பள்ளிக்கல்வி  இயக்குநர்  அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் அவர்களுக்கு கீழ்கண்ட அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்

அரசுப்பள்ளியில் 6 ஆம் வருப்பு முதல் 12 ஆம் வருப்பு வரை படித்த மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேருவதற்கு மருத்துவக் கல்வி இயக்ககத்தால் அறிவிக்கப்பட்டுள்தன் படி 12.11.2020 அன்று மாலை 5 மணிக்குள் இணையதள வாயிலாக விண்ணப்பிக்க தலைமையாசிரியர்கள் சார்ந்த மாணவர்களுக்கு உரிய வழிகாட்டுதலை வழங்க வேண்டும்.

* அரசு பள்ளி என்பது அரசு பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகள், நகராட்சி பள்ளிகள், ஆதிதிராவிடர், பழிங்குடியினர் நலப்பள்ளிகள், கள்ளர் சீர்மரபின பள்ளிகள், வனத்துறை பள்ளிகள், சமூக பாதுகாப்பு துறை பள்ளிகள் (Borstal Schools) ஆகியவை உட்பட்டதாகும்.

நீட் தேர்வு தேர்ச்சி பெற்று மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பிக்க உள்ள மாணவர்கள் இறுதியாக மேல்நிலைக் கல்வி பயின்ற மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியருக்கு மட்டுமே உரிய கோரிக்கை விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். 
* இணைப்பில் -3ல் உள்ள படிப்பு சான்றிதழில் (Bonafide Certificate) மாணவரின் பெயர், தந்தையார் பெயர், இருப்பிட முகவரி மற்றும் மேல்நிலைப் பள்ளியில் மாணவர் எந்த வகுப்பில் இருந்து எந்த வகுப்பு வரை பயின்றார் என்றும், பள்ளியின் பெயர் மற்றும் முகவரி மாணவரால் பூர்த்தி செய்தல் வேண்டும்.

இணைப்பு 


NEET  7.5 % Quota   Bonafide Certificate 


 Instructions For NEET  7.5 % Quota - ந௧ எண் . 344617கே 7/1 / 2020, நாள். 03 .11.2020.


Join Telegram& Whats App Group Link -Click Here