Guidelines For Shaala Siddhi 2020-21
2020-21 ஆம் ஆண்டிற்கான """"பள்ளித் தரநிலை மற்றும் மதிப்பீடு "" (Shaala Siddhi) உட்கூறு சார்ந்த - சுயமதிப்பீடு மற்றும் புறமதிப்பீடு (Self and External Evaluation) – ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி வழிகாட்டு நெறிமுறைகள்
சுயமதிப்பீடானது கடந்த 2016-17, 2018 -19 மற்றும் 2019-20 ஆகிய ஆண்டுகளில் அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் மேற்கொண்டு இதற்கென உள்ள NIEPA website ல் பள்ளி சார்ந்த தகவல்கள் பதிவு செய்யப்பட்டது.
இதுபோன்று, புறமதிப்பீடானது, 2018-19-ம் ஆண்டு முதல் ஒன்றிய வாரியாக தேர்வு செய்த பள்ளிகளில் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், 2018-19 ஆம் ஆண்டு ஒன்றியத்திற்கு 20 பள்ளிகள் வீதம் மொத்தம் 8260 பள்ளிகளிலும், 2019-20 கல்வி ஆண்டில் ஒன்றியத்திற்கு 40 பள்ளிகள் வீதம் மொத்தம் 16520 பள்ளிகளிலும் இந்த புறமதிப்பீடானது மேற்கொண்டு, இதற்கென உள்ள NIEPA website -ல் பள்ளி சார்ந்த தகவல்கள் பதிவு செய்யப்பட்டள்ளது.
பள்ளித் தரநிலை மற்றும் மதிப்பீடு திட்டத்தில், தற்போது 2020-21 கல்வி ஆண்டிற்கான சுயமதிப்பீடு அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மேற்கொண்டு இதற்கென உள்ள website- ல் பதிவு செய்யவதோடு மட்டுமன்றி தேசியக் கல்வி திட்டமிடல் மற்றும் நிருவாக நிறுவனத்தின்(NIEPA) அறிவுரைப்படி random sampling முறையில் தெரிவு செய்யப்பட்ட பள்ளிகளுக்கு மட்டும் புறமதிப்பீடு(External Evaluation) செய்ய வேண்டும்.
0 Comments
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..
அன்புடன்: KALVIEXPRESS