Hsc +1,+2 துணை பொதுத் தேர்வுகள்,2020 – மறுகூட்டல் / மறுமதிப்பீடு முடிவுகள் வெளியிடு - அரசுத் தேர்வுகள் இயக்ககம்  செய்திக் குறிப்பு.


செப்டம்பர் / அக்டோபர் 2020 மாதம்  மேல்நிலை முதலாமாண்டு / இரண்டாமாண்டு துணை பொதுத் தேர்வுகள்  நடைபெற்றது . அதற்கான முடிவுகள் கடந்த மாதம் வெளியிடபட்டது ,மேலும் மறுமதிப்பீடு / மறுகூட்டல் கோரி விண்ணபித்தவர்களுக்கு மதிப்பெண்  பட்டியல் பதிவிறக்கம் செய்வது தொடர்பாக அரசு தேர்வு இயக்கம் 11.12.2020 அன்று செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளது அதன் விபரம் கீழே கொடுக்கபட்டுள்ளது 

 நடைபெற்ற செப்டம்பர் / அக்டோபர் 2020, மேல்நிலை முதலாமாண்டு / இரண்டாமாண்டு துணை பொதுத் தேர்வு எழுதி, மறுகூட்டல்(Re-total)மற்றும் மறுமதிப்பீடு(Revaluation)கோரி விண்ணப்பித்தவர்கள், , www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் 15.12.2020  -செவ்வாய் அன்று பிற்பகல் 2.00 மணிக்கு தங்களது தேர்வெண் மற்றும் பிறந்த தேதி ஆகிய விவரங்களை பதிவு செய்து தங்களுக்கான திருத்தப்பட்ட மதிப்பெண்கள் அடங்கிய மதிப்பெண் பட்டியலினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மதிப்பெண் பட்டியலில் மாற்றம் இல்லாத தேர்வெண்களுக்கான விடைத்தாட்களில் எவ்வித மதிப்பெண் மாற்றமும் இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

Join Telegram& Whats App Group Link -Click Here