Instructions to get Scholarship from National Teachers Welfare Fund


தமிழ் நாடு தேசிய ஆசிரியர் நல நிதியிலிருந்து தொழிற்கல்வி பயிலும் ஆசிரியர் பிள்ளைகளுக்கு 2020-2021 படிப்புதவிதொகை  பெறுவது தொடர்பான இயக்குநர் செயல்முறை மற்றும் விண்ணப்பம் 


படிப்புதவித் தொகை பெற தேவையான தகுதிகள்


1 விண்ணப்பிக்கும் ஆசிரியர்களின் மகன்/மகள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள நிறுவனத்தில் அங்கீகரிக்கப்பட்ட நான்காண்டு தொழிற் கல்வி பட்டப்படிப்பு (4 Years Degree Courses) மற்றும் மூன்று ஆண்டு பட்டயப்படிப் (Diploma courses) படிப்பவர்களாக இருத்தல் வேண்டும். மேலும் கல்வி உதவித் தொகை கோரவிருக்கும் ஆசிரியர்கள் குறைந்தபட்சம் பத்தாண்டுகள் பணியினை முழுமையாக முடித்திருக்க வேண்டும்.

2. இதற்கு முந்தைய அனைத்து தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். (சான்றளிக்கப்பட்ட மதிப்பெண் சான்றிதழ் நகல் இணைத்தல் வேண்டும்)

3. மனுவில் உள்ள அனைத்து கலங்களும் முழுமையான அளவில் சரியாக தமிழில் பூர்த்தி செய்திருத்தல் வேண்டும். சரியாக பூர்த்தி செய்யப்படாத மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. (பணிபுரியும் பள்ளி, முகவரி பின் கோடுடன் இருத்தல் வேண்டும்)

4. பெற்றோர்களின் ஆண்டு வருமானம் ரூ. 7,20,000 / (அடிப்படை ஊதியம் மட்டும் )க்குள் இருத்தல் வேண்டும்.

5. விண்ணப்பங்கள் பள்ளிக் கல்வி இயக்குநர் அலுவலகத்திற்கு வந்து சேர வேண்டிய கடைசி நாள்31.01.2021 க்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஆசிரியர்கள் நேரடியாகவோ அல்லது பதிவு அஞ்சல் மூலமாகவோ பள்ளிக் கல்வி இயக்குநர், பள்ளிக் கல்வி இயக்ககம், சென்னை - 6 என்ற முகவரிக்குஅனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

6. தொழிற்கல்வி படிப்பில் கடைசியாக எழுதிய தேர்வில் தேர்ச்சி பெற்றமைக்கு ஆதாரமான மதிப்பெண் சான்றிதழ் நகல்கள் இன்றி பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

7. தந்தை அல்லது தாய் பணியின் விவரம் மற்றும் அவர்களின் ஊதிய சான்று விவரங்களை கண்டிப்பாக விண்ணப்பத்தில் உள்ள கலத்தில் பூர்த்தி செய்திருக்க வேண்டும்.

8. தந்தை அல்லது தாய் ஆசிரியராக பணிபுரிந்தால் மட்டுமே விண்ணப்பிக் வேண்டும்

9. ஆசிரியரல்லாத பணியாளர்கள் விண்ணப்பிக்கக் கூடாது.

10. ஓய்வு பெற்ற ஆசிரியர்களின் பிள்ளைகள் மற்றும் இறந்து போன ஆசிரியர்களின் பிள்ளைகள் ஆகியோர்களும் இப்பப்புதவித் தொகை பெற தகுதியுள்ளவர்கள் ஆவார்கள். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 3101.2021க்குப்பின் கண்டிப்பாக ஏற்கப்படமாட்டாது.

Instructions to get Scholarship from National Teachers Welfare Fund


Application to get Scholarship from National Teachers Welfare Fund


Join Telegram& Whats App Group Link -Click Here