9,11 வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்க அனுமதிபிப்ரவரி 8ஆம் தேதி முதல் 9ஆம் வகுப்புக்கும், 11ஆம் வகுப்புக்கும் பள்ளிகளில் வகுப்புகள் நடைபெறும் என்று அறிவிக்கபட்டுள்ளது. கடந்த மாதம் தமிழகத்தில் ஜனவரி 31-ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார்.எனவே தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் வருகின்ற 31-ஆம் தேதி நள்ளிரவு வரை பொது ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் புதிய தளர்வுகளுடன் பொது ஊரடங்கு பிப்ரவரி 28-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.மேலும் பிப்ரவரி 8-ஆம் தேதி முதல் ஒன்பதாம் வகுப்பு மற்றும் பதினொன்றாம் வகுப்புகளுக்கு வகுப்புகள் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.11,மற்றும் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு குறைக்கப்பட்ட பாட திட்டம் கடந்த வாரம் தமிழக் பள்ளி கல்வி துறையால் வெளியிடப்பட்டது , மேலும் கடந்த வாரம் 9,11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி திறக்க ஆயத்த பணியை கல்வி துறை மேற்கொண்டது 

Join Telegram& Whats App Group