Tamil Nadu School open At Jan 19-2021


கொரோனா நோய் தொற்று காரணமாக  கடந்த  ஆண்டு மார்ச் மாதம் பள்ளிகள், கல்லூரிகள் அனைத்தும் மூடபட்டது . மாணவர்களுக்கு தேர்வுகள் நிறுத்தபட்டு காலாண்டு ,அரையாண்டு மதிப்பெண் அடிப்டையில் தேர்ச்சி வழங்கப்பட்டது .

இந்த கல்வியாண்டு  ஜூன் மாதம் திறக்க வேண்டிய பள்ளிகள் கொரோனா நோய் தொற்று காரணமாக திறக்கப்படாமல் இணைய வழி மற்றும் தொலைகாட்சி வழியாக கல்வி கற்றல் நடைபெறுகிறது. 

பள்ளிதிறப்பு தொடர்பாக பெற்றோரிடம் கருத்து கேட்ப்பு கூட்டம் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்றது.மழை காரணமாவும் , நோய் தொற்று குறையாத காரணத்தினால் பள்ளி திறக்க பெரும்பாலான பெற்றோர் ஆதரவு தெரிவிக்கவில்லை.

10,11,12, வகுப்புகு கட்டாயம் பொது தேர்வு நடத்தபடும் என தமிழக அரசு அறிவித்தது , அதனை தொடர்ந்து கடந்த வாரம் 10,12 வகுப்புக்கு மட்டும் பள்ளி திறக்க கருத்து கேட்ப்பு கூட்டம் நடைபெற்றது , பள்ளி திறக்க பெற்றோர்கள் ஆதரவு அளித்த நிலையில் .. பள்ளிதிறப்பு தொடர்பாக முதலமைச்சர் இன்று 12/01/2021 பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளார்.


அதன் படி  19.1.2021ம்‌ தேதி முதல்‌ 10 மற்றும்‌ 12ஆம்‌ வகுப்பு மாணவர்களுக்கு மட்டும்‌ பள்ளிகள்‌ திறக்கப்படும்‌. பள்ளிகள்‌ திறக்கப்படும்போது, ஒரு வகுப்பறைக்கு 25 மாணவர்களுக்குமிகாமல்‌ செயல்படவும்‌, அரசு வெளியிடும்‌ வழிகாட்டி நெறிமுறைகளுக்கு உட்பட்டும்‌ செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது. அவ்வாறு பள்ளிக்கு வரும்‌ மாணவர்களுக்கான விடுதிகளும்‌ செயல்பட அனுமதிக்கப்படுகின்றது.

அனைத்து மாணவர்களுக்கும்‌ நோய்‌ எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க
ஏதுவாக, வைட்டமின்‌ மற்றும்‌ துத்தநாக மாத்திரைகள்‌ வழங்க சுகாதாரத்‌ துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மாணாக்கர்களின்‌ நலன்‌ கருதி, அரசு எடுத்து வரும்‌ கோவிட்‌ தடுப்பு
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு பெற்றோர்களும்‌, ஆசிரியர்களும்‌ மற்றும்‌ மாணவர்களும்‌ முழு ஒத்துழைப்பினை நல்குமாறு அன்புடன்‌ கேட்டுக்‌ கொள்கிறேன்‌. என அதில்  தெரிவிக்கபட்டுள்ளது.