அனைத்து உயர்நிலை / மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களும் தங்கள் பள்ளியில் பத்தாம் வகுப்பு மேல்நிலை முதலாமாண்டு பயிலும் மாணாக்கரது விவரங்களை 01.02.2021 முதல் 11.02.2021 வரையிலான நாட்களில் இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்து, தேர்வுக் கட்டணத்தினையும் இணையதளம் வாயிலாக செலுத்தவேண்டும் என பள்ளி தேர்வு துறை மூலம் அறிவுறுத்தப்பட்டது
ஆனால் ஒரு சில பள்ளிகளின் மாணாக்கரின் விவரங்களை இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்வதில் சில சிரமங்கள் இருந்த காரணத்தினால் , பத்தாம் வகுப்பு / மேல்நிலை முதலாமாண்டு மாணாக்கரின் விவரங்களை இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்வதற்கும், இணையதளம் மூலம் தேர்வுக்கட்டணத்தினை செலுத்துவதற்கும் 12.02.2021 முதல் 18.02.2021 வரையிலான நாட்களில் கூடுதலாக கால அவகாசம் வழங்கப்படுகிறது என் பள்ளி தேர்வு இயக்குநர் தெரிவித்துள்ளார்.
மேலும் அனைத்து மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களும் 12.02.2021 முதல் 18.02.2021 வரையிலான நாட்களில் www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்குச் சென்று பின்வரும் வழிமுறைகளை பின்பற்றி 2020-2021-ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்விற்க்கான தேர்வு முடிவுகள் அடங்கிய அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியலை (TML) ஆன்லைன் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்வதற்கான கட்டணம் ரூ.300/-ஐ செலுத்த வேண்டும். அனைத்து உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளும் (எந்த ஒரு பள்ளியும் விலக்கு இல்லாமல்) இக்கட்டணத்தினை செலுத்தவேண்டும் என தெரிவிக்கபட்டுள்ளது
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..