NMMS Exam Hall Ticket can be downloaded from 15.02.2021


NMMSதேர்வுக்கான  Hall Ticket 15.02.2021 முதல் பதிவிறக்கம் செய்யலாம் 

21.02.2021 அன்று நடைபெறவிருக்கும் தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்டத்(NMMS)  தேர்விற்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுக்களை 15.02.2021 அன்று பிற்பகல் முதல் பள்ளித் தலைமையாசிரியர்கள்  www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் ஏற்கனவே இத்தேர்விற்கு வழங்கப்பட்ட User ID/Password–ஐ கொண்டு பதிவிறக்கம் செய்து கொள்ள உரிய அறிவுரைகளை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. 

தேர்வர்களின் தேர்வுகூட நுழைவுச் சீட்டுகளில் பெயர் / புகைப்படம் / பிறந்த தேதி ஆகியவற்றில் திருத்தம் ஏதும் இருப்பின் திருத்தத்தினை சிகப்பு நிற மையினால் சுழித்து சரியான பதிவினை குறிப்பிட்டு பள்ளி தலைமையாசிரியர்களிடம் சான்றொப்பம் பெற்று  தேர்வெழுத அத்தேர்வர்களுக்கு அனுமதி வழங்க தேர்வு மைய கண்காணிப்பாளரிடம் அறிவுறுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

NMMS HALL TICKET & NR DOWNLAODING DGE  INSTRUCTIONS




Join Telegram& Whats App Group