9Th,11Th School Reopen DSE  Instruction 


08.02.2021 முதல் 9 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கு பள்ளி திறப்பதறக்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் பள்ளிக் கல்விஇயக்குநர் அலுவலர்கள்.  வெளியிட்டுள்ளார் .

9Th,11Th School Reopen DSE  Instruction Date :03.02.2021


அதன்படி பள்ளிகளில் சமூக இடைவெளியைப் பின்பற்றும்போது
வகுப்பறை வசதிகள், ஆசிரியர்கள் எண்ணிக்கையைப் பொறுத்து பள்ளிகள் செயல்பட கீழ்க்கண்ட கூடுதல் வழிமுறைகளைப் பின்பற்ற அவர் தெரிவித்துள்ளார்.

1.வகுப்பறையில் கூடுதலாக இடவசதி இருப்பின் அதிக இருக்கையினை போட்டு சமுக இடைவெளியுடன் கூடுதலாக மாணவர்களை வகுப்பறையில் அமர செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2. மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப சமூக இடைவெளியை பின்பற்ற போதிய வகுப்பு அறைகளும் ஆசிரியர்களும் இருப்பின் திங்கள் முதல் சனிக்கிழமை வரை அனைத்து வகுப்புகளும் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை) முழுவேளையாக பள்ளி இயங்கலாம்.

3. சமூக இடைவெளியைப் பின்பற்றும்போது, மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதலாக சில வகுப்பறைகள் மட்டும் தேவைப்படும்போது பள்ளியில் உள்ள ஆய்வகம், நூலகம், கூட்ட அரங்கம் போன்றவைகளை பயன்படுத்தி 9 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு முழு வேளையாக பள்ளிகள் செயல்படலாம்.

4. சமூக இடைவெளியைப் பின்பற்றும்போது, சில பள்ளிகளில் கூடுதல் ஆசிரியர்கள் தேவை இருக்குமானால் மாணவர்களை பெரியவகுப்பறை, கூட்ட அரங்கம் போன்ற இடங்களில் அமரவைத்து வகுப்புகளை நடத்தலாம்.

5. சில பள்ளிகளில் வகுப்பு பிரிவுகளின் எண்ணிக்கை சமூக இடைவெளியைப் பின்பற்றுவதால் இரு மடங்கு ஆகும் என்பதால் கீழ்க்காணும் ஏதாவது ஒரு முறையை பின்பற்றலாம் 

1.சில வகுப்புகள் / பிரிவுகள் ஒரு நாள் விட்டு ஒரு நாள் (alternate Day ) செயல்படலாம்.

 

2) பள்ளிகளில் சில வகுப்புகள் / பிரிவுகள் இரண்டு வேளைகளாக ( Shift System) செயல்படலாம். அவ்வாறு செயல்படும்போது, காலைவகுப்புகள் முடிந்தவுடன் முறையாக கிருமி நாசினி கொண்டுவகுப்பறைகளை சுத்தம் செய்திடல் வேண்டும். அதன் பிறகு மாலை வகுப்புகள் தொடங்கப்பட வேண்டும்.

3) பள்ளி தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள் தங்கள் பள்ளியின் ஆசிரியர்கள், வகுப்பறைகள் மாணவர்களின் எண்ணிக்கையை பொறுத்து மேலேதெரிவிக்கப்பட்டுள்ளபடி பள்ளிகளை செயல்படுத்த அனுமதிக்கப்படுகிறது. என தெரிவிக்கப்பட்டுள்ளது .



Join Telegram& Whats App Group