DEE- All Promotion Counseling withheld 


தொடக்கக் கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ் செயல்படும் ஊராட்சி ஒன்றிய /நகராட்சி/ மாநகராட்சி /அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு 27 .2.2021 மற்றும் 28.2 .2021 ஆகிய நாட்களில் நடத்திட அறிவுரைகள் மற்றும் அட்டவணைகள் வெளியிடப்பட்டிருந்தது 

சென்னை உயர்நீதிமன்றமதுரைக் கிளையில் வட்டார கல்வி அலுவலர் பதவி உயர்வு ,நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர், பட்டதாரி ஆசிரியர்களின் பதவி உயர்வு மற்றும் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு இடைக்கால தடை வழங்கப்பட்டுள்ளதால்

மேலும்  26.2.2021 நடக்கவிருந்த வட்டார கல்வி அலுவலர் பதவி உயர்வு கலந்தாய்வு இடைக்கால தடை ஆணை வழங்கப்பட்டுள்ள காரணத்தினால் மறு உத்தரவு வரும் வரை அனைத்து கலந்தாய்வுகளும்  நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்கள் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்






Join Telegram& Whats App Group