How To Fill Postal Vote Form


தேர்தல் பணியிலிருக்கும் அலுவலர் ஒருவர் தபால் வாக்கினை பெறுவதற்க்கு படிவம் 12 ஐ நிரப்பி தேர்தல் பணி ஆணை நகல் வக்காளர் அடையாள அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து தனது வாக்கு இருக்கும் தேர்தல் நடத்தும் அலுவலருக்கு விண்ணப்பிக்கவேண்டும். 

தபால் வாக்கு உங்கள் வீட்டு முகவரிக்கு  அனுப்படும் அல்லது  தேர்தல் பயிற்சி வகுப்பிலோ உங்களுக்கு தபால் வாக்குசீட்டும் அதனுடன்  .படிவம் 13 A,13B,13C 13D ஆகியவற்றை உங்களுக்கு வழங்குவார்கள் 

இனி எவ்வாறு தபால் வாக்களிப்பது என்று காண்போம் .

Postal Voting method in Pdf 

  • தபால் வாக்குச்சீட்டு வழங்கப்படும் படிவம் 13 A என்பது அஞ்சல் வாக்குச்சீட்டு மூலம் வாக்களிப்பவர் அளிக்க வேண்டிய உறுதி மொழி ஆகும் 
  • படிவம் 13 B என்பது ஒரு உறை ஆகும்  -இது (Cover A) 
  • படிவம் 13 C என்பது ஒரு உறை ஆகும்  -இது (Cover B) 
  • 13 D –Instruction ஆகும் 

13 A படிவத்தினை நிரப்பி அதில் வாக்களிப்பர் ஒப்பமிட்டு அந்த ஒப்பத்தினை அரசிதல்  பதிவு பெற்ற அலுவலரின் சான்றொப்பம் கட்டாயம் பெற வேண்டும்.

தேர்தல் நடத்தும் அலுவலர் வழங்கிய வாக்கு சீட்டில் எந்த வாக்காளருக்கு வாக்களிக்க விருப்புகிறாரோ அவரின் பெயர் விபரம் அடங்கிய பகுதியில் டிக் (⎷) செய்ய வேண்டும் 

வாக்கு செலுத்திய வாக்குச்சீடினை படிவம் 13 B என்ற கவரில்  (Cover A) வைத்து அந்த கவரை ஒட்டிவிட வேண்டும் .

கவர் A என்ற உறையில் மேல் உள்ள படிவத்தினை முழுவதுமாக விடுதலின்றி நிரப்ப வேண்டும்.

வாக்குசீட்டு வைக்கப்பட்டு ஒட்டபட்ட (Cover A) உடன் படிவம் 13 A வை சேர்த்து  படிவம் 13 C என்ற கவரில்  (Cover B) வைத்து அந்த கவரினை ஒட்டி விட வேண்டும்.

படிவம் 13 C ஐ நிரப்பி அதில் வாக்காளர் தனது முழு கையெழுத்து இட வேண்டும்