கொரோனா பரவலை கட்டுப்படுத்த, கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்தது தமிழக அரசு:

26ஆம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகிறது.


 ஏப்.26ஆம் தேதி முதல் திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், கூட்ட அரங்குகள், பார்கள் இயங்க அனுமதியில்லை - தமிழக அரசு.

பெரிய கடைகள், வணிக வளாகங்கள் இயங்க அனுமதியில்லை.

சென்னை உள்பட மாநகராட்சிகளில், நகராட்சிகளில் சலூன்கள், அழகு நிலையங்கள் செயல்பட அனுமதியில்லை.

புதுச்சேரி தவிர்த்து பிற மாநிலங்களில் இருந்து தமிழகம் வர இ-பதிவு கட்டாயம்.

உணவகங்கள், டீக்கடைகளில் பார்சலுக்கு மட்டுமே அனுமதி - அமர்ந்து சாப்பிட அனுமதி இல்லை.

திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்க 50 பேர் மட்டுமே அனுமதி

அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை

உரிய நடைமுறைகளை பின்பற்றி குடமுழுக்கு மட்டும் நடத்த அனுமதி - தமிழக அரசு.

இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் ஒருநாள் முழு ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருக்கும்.

இறுதி ஊர்வலம், சடங்குகளில் 25 பேருக்கு மேல் பங்கேற்க அனுமதி இல்லை.

கோல்ஃப், டென்னிஸ் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு சங்கங்கள் செயல்பட அனுமதி இல்லை.

சர்வதேச, தேசிய அளவிலான போட்டிகளுக்கு மட்டும் அனுமதி.

ஐடி நிறுவனங்களில் குறைந்தபட்சம் 50% பணியாளர்கள் வீட்டிலிருந்து பணிபுரிவது கட்டாயம் - தமிழக அரசு.


DIPR-P.R.No.227-Press Release-covid 19 Restriction-Date-24.04.2021.pdf

அனைத்து மின் வணிக சேவைகள் (e-commerce) வரையறுக்கப்பட்டுள்ள நேரக் கட்டுப்பாடுகளுடன் இயங்கலாம் - தமிழக அரசு.