பள்ளிக்கல்வி இயக்குனர் அவர்களின் தலைமையிலான காணொளி கூட்டத்தின் அடிப்படையில் உயர்நிலைப் பள்ளிகளுக்கு நாளை17.04.2021 சனிக்கிழமை அன்று விடுமுறை அளிக்கப்படுகிறது மேலும் உயர்நிலை\ மேல்நிலைப் பள்ளிகளை பொருத்தமட்டில் இனி வரும் காலங்களில் வாரத்திற்கு ஐந்து நாட்கள் திங்கள் முதல் வெள்ளி வரை மட்டுமே செயல்படும் .

இதனை தொடர்ந்து 17 .4. 2021 அன்று மேல்நிலைப்பள்ளி இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவ/ மாணவியர்களுக்கு செய்முறை தேர்வு நடைபெறுவதால் செய்முறை தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மட்டும் பள்ளிக்கு வருகை புரிய வேண்டும் .செய்முறை தேர்வு இல்லாத மாணவர்களுக்கு 17. 4 .2021 முதல் Study Leave விடப்படுகிறது. செய்முறை தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தங்கள் செய்முறை தேர்வு முடிந்த அடுத்த நாள் முதல் Study  Leave விடப்படுகிறது. அனைத்து மாணவர்களையும் ஹால் டிக்கெட் வழங்கும் நாள் (23.04.2021) அன்று வரவைத்து  அரசின் நிலையான வழிகாட்டுதலை(SOP) பின்பற்றி ஹால்டிக்கெட் வழங்கவேண்டுமென தெரிவித்துள்ளார்