அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளிள் உபரி பணியிடம் கலந்தாய்வு தொடர்பான இயக்குனர் செயல்முறை
தமிழ்நாடு தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறைச்சட்டம் 1973 விதிகள் 1974 ன்படி பள்ளிக்கல்வித்துறையின் கீழ் செயல்படும் அரசு நிதியுதவி பெறும் உயர்நிலை / மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர் மற்றும் பள்ளி நிர்வாகத்தால் நியமன ஒப்புதல் கோரி சென்னை உயர் நிதிமன்ற மதுரை கிளையில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டது. இவ்வழக்குகளின் தீர்ப்பாணையின் மீது துறையால் மேல் முறையீடு செய்யப்பட்டு சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளை மேல்முறையீட்டு வழக்கு WA (MD) Nos 7.225 Ect Batchesன் மீது 31,03.2021ன் தீர்ப்பாணை பெறப்பட்டது. இந்நிலையில் பார்வை-4 ல் கண்டுள்ள 31.03.2021 நாளிட்ட நீதிமன்ற தீர்ப்பாணையில் ஆசிரியர்களுக்கு பணிநிரவல் மேற்கொள்ளுவது சார்ந்து வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது. அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களும் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு நீதிமன்ற தீர்ப்பாணை நகல் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது.
Government Aided School-surplus Court Copy.pdf
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..