ஆசிரியர்கள் , அரசு ஊழியர்கள் ஒருநாள் ஊதியத்தை கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு  வழங்க முடிவு 

ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள்-பணியாளர்கள் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கு தங்களது ஒருநாள் ஊதியமான ரூ.150 கோடியினை வழங்க முடிவு.

தற்போது கொரொனா இரண்டாம அலையின் தாக்கம்  அதிகமாக உள்ளநிலையில் மாநில அரசு இந்த நோயினை எதிர்கொள்ள உட்கட்டமைப்பு வசதி ஏற்படுத்த போதுமான நிதி ஆதாரங்கள் தேவைபடும் நிலையில் 


தமிழகத்திலுள்ள 12 இலட்சம் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள்-பணியாளர்கள், சிறப்புக் காலமுறை ஊதியத்தில் பணியாற்றும் சத்துணவு-அங்கன்வாடிப் பணியாளர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ ஒருநாள் ஊதியத்தினை கொரோனா நோய் தொற்று நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக தமிழக அரசிற்கு வழங்க முடிவு செய்துள்ளது.



மேலும் நோய் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், ஆய்வகப் பணியாளர்கள், மருந்தாளுநர்கள், மருத்துவத் துறைதொழில்நுட்பப் பணியாளர்கள், உள்ளிட்ட அனைத்து மருத்துவம் சார்ந்த பணியாளர்களுக்கும் ,அனைத்து சுகாதாரதுய்மை ஊழியர்களுக்கும் மற்றும் அனைத்துத் துறைப் பணியாளர்களுக்கும் ஜாக்டோ ஜியோ தனது மனமார்ந்த பாராட்டுதல்களையும்  நெஞ்சார்ந்த நன்றியினையும் தெரிவித்துள்ளது