12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முதல்வரிடம் ஆலோசித்து முடிவு
பிளஸ் 2 பொதுத்தேர்வு எப்போது நடத்தப்படும் என்பது குறித்து முதல்வரிடம் ஆலோசித்து அறிவிக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வை எப்போது நடத்துவது, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் வழங்குவது, தனியார் பள்ளி மாணவர்களுக்கான கட்டணம் நிர்ணயம் செய்தல் என பல்வேறு விஷயங்கள் தொடர்பாக பள்ளிக்கல்வித்துறைஅமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி தலைமையில் ஆலோசனை கூட்டம் சென்னையில் நேற்று திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன்,உயர் கல்வி- பள்ளிக் கல்வித்துறைச் செயலாளர் அபூர்வா, அரசுதேர்வுத் துறை இயக்குநர் சி.உஷாராணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மாணவர்களின் எதிர்காலத்தைவிட அவர்களதுஉடல் நலம் முக்கியமானது என்பதால் நன்றாக ஆலோசித்து மட்டுமே எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என்றநிலைப்பாட்டில்உள்ளோம்.இதுகுறித்து முதல்வரிடம் ஆலோசனை நடத்திய பின்பு அவரின்அறிவுறுத்தலின்படி முடிவுகள்எடுக்கப்படும் என்றும்,
பிளஸ் 2 மாணவர்கள் நேரடியாக தேர்வு எழுத வருவதில் சிக்கல் உள்ளது. மாணவர்கள் தேர்வுக்கு வந்தாலும் வீட்டில் உள்ளவர்களையும், மற்ற மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டிய கட்டாயத்தில் உன்ளோம்.
இன்றும்-நாளையும் ஆலோசனை: இந்த ஆலோசனைக்கூட்டம் செவ்வாய், புதன்கிழமையிலும் தொடரும். இதைத்தொடர்ந்து மேலும் சில குழுக்களுடன் ஆலோசனைநடத்திய பின்னரே முடிவெடுக்கப்பட்டு அறிவிப்பு வெளியிடப்படும்.
பள்ளி கட்டமைப்பு என்பது நகர்ப்புறங்களில் ஒருமாதிரியாகவும், கிராமப்புறங்களில் ஒரு மாதிரியாகவும் உள்ளது. அதன்கக் குறித்தும் கரோனாகாலங்களில் எத்தகைய கட்டமைப்பை உருவாக்க வேண்டும்என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது தொடர்பாக மற்ற மாநிலங்களில் எப்படிப்பட்ட நிலை கையாளப்பட்டுள்ளது என்பதை ஆராய செயலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் இறுதி முடிவு எடுக்கப்படும். நீட்தேர்வு,அதற்கான சிறப்பு வகுப்புகள் தொடர்பாக எந்த ஆலோசனையும் மேற்கொள்ளவில்லை. நீட்தேர்வுக்கு விலக்கு குறித்து முடிவு எடுக்கப்பட்ட பின்னரே தேர்வு குறித்து விவாதிக்கப்படும் எனபள்ளி கல்வி துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..