கற்போருக்கான அடைவுத் தேர்வு ஒத்திவைப்பு – பள்ளிசாராமற்றும் வயதுவந்தோர் கல்விஇயக்ககம்

தமிழகத்தில், 2020-2021ஆம் நிதியாண்டில், 15வயதுக்கு மேற்பட்ட, முற்றிலும் எழுத மற்றும் படிக்கத் தெரியாத 3.10 இலட்சம் பேருக்கு அடிப்படை எழுத்தறிவை வழங்கிடும் நோக்கில் கற்போம் எழுதுவோம் இயக்கம், மத்திய மற்றும் மாநில அரசுகளின் 60:40 என்கிற நிதிப்பங்களிப்பின் கீழ் அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது இத்திட்டம் ஜீலை-2021 வரை மத்திய அரசால் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

கற்போருக்கு 16.05.2021 அன்று இறுதி அடைவுத் தேர்வு நடத்தப்பட திட்டமிடப்பட்டது. தற்போது, கொரோணா தொற்று பரவலின் காரணமாக, இத்தேர்வினை மறுதேதி குறிப்பிடாமல் மத்திய அரசினால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இத்தேர்வு நடத்துதல் சார்ந்த புதிய தேதி பின்னர் என பள்ளிசாராமற்றும் வயதுவந்தோர் கல்விஇயக்ககம் தெரிவித்துள்ளது 

மேலும், கற்போம் எழுதுவோம் இயக்ககத்தின் கீழ் சேர்க்கப்பட்டு பயின்று வருகின்ற கற்போர்கள் அனைவரும்அவர்களுக்கேதுவான நேரத்தில், கல்வி தொலைக்காட்சி (தினந்தோறும் மாலை 7.00 மணி முதல் 7.30 மணி வரை) அல்லது வீட்டுவழிக் கல்வி ஆகிய ஏதாவதொரு நிலையில் தொடர்ந்து பயின்றிடும் வகையில் கற்போரை ஊக்குவிக்கவும், இதற்கு உறுதுணையாக அந்நதந்த தன்னார்வல ஆசிரியர்களின் மதிப்புமிகு சேவைகளை உரிய வகையில் தொடர்ந்து பயன்படுத்திடவும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிசாராமற்றும் வயதுவந்தோர் கல்விஇயக்ககம் சுற்றறிக்கை மூலம் தெரிவித்துள்ளது