25 ஆண்டுகளாக இணைய சேவை வழங்கி வந்த இன்டர்நெட் எக்ஸ்புளோரர், கடந்த சில ஆண்டுகளாக வாடிக்கையாளர்களின் ஆதரவை இழந்து வந்தது. கூகுள் மற்றும் பயர்பாக்ஸ் உள்ளிட்ட பிரவுசர்களின் வளர்ச்சிக்குப் பிறகு இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பெரும்பாலானோரால் பயன்படுத்தப்படவில்லை. 25 ஆண்டுகளாக பிரவுசர் சேவையில் இருந்த மைக்ரோசாப்ட் நிறுவனம், தற்போது தங்களின் இணைய சேவைக்கான ஆதரவை நிறுத்தப்போவதாக கூறியுள்ளது. அடுத்த ஆண்டு ஜூன் 15ம் தேதி முழுமையாக இந்த சேவை நிறுத்தப்படுகிறது. இது குறித்து, அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது மைக்ரோசாப்ட் நிறுவனம்.

.கடந்த 1995ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதத்தில் அறிமுகம் ஆனது இன்டர்நெட் எக்ஸ்புளோரர். இப்போது கால் நூற்றாண்டு கடந்துவிட்டது. கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கு பிறகு அது தன் ஓட்டத்தை நிறுத்திக் கொள்ள இருக்கிறது. 'விண்டோஸ் 95' அறிமுகம் ஆகும்போது, அதனுடன் சேர்த்து இன்டர்நெட் எக்ஸ்புளோரரும் அறிமுகம் ஆனது என்பது குறிப்பிடதக்கது.

'இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 11' பிரவுசருக்கு பதிலாக 'மைக்ரோசாப்ட் எட்ஜ்' பயன் படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது நவீன கால இணையதளங்களுக்கு ஏற்றதாக, 'எட்ஜ்' இருக்கிறது.மைக்ரோசாப்ட் எட்ஜுக்கு வாடிக்கையாளர்கள் மாறிக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டிருக்கும் மைக்ரோசாப்ட், எட்ஜ் தேடுபொறியை மிக எளிமையானதாகவும் மாற்ற இருப்பதாக தெரிகிறது.