9-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

கரோனா தொற்று காரணமாக இந்த ஆண்டு அனைத்துப் பொதுத் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் உயர் கல்வி சேர்க்கை குறித்து கல்வித்துறை ஆலோசனை நடத்தி வருகிறது.

இதுதொடர்பாகச் சென்னை, தலைமைச் செயலகத்தில் இன்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது அவர் கூறும்போது, ,.''கரோனா காரணமாக இந்த ஆண்டு மாணவர்கள் 11-ம் வகுப்பில் எந்த அடிப்படையில் சேர்க்கப்படுவார்களோ, அதே அடிப்படையில் முதலாம் ஆண்டு பாலிடெக்னிக் மாணவர்களும் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். அதாவது ''தமிழகத்தில் உள்ள 51 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகளில் நிகழ்வாண்டிற்கான சேர்க்கை 9ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும் எனதெரிவித்தார்.

பொறியியல் மற்றும் கலை அறிவியல் மாணவர்களுக்கு எந்த அடிப்படையில் உயர்கல்வி சேர்க்கையை நடத்தலாம் என்பது குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது. முதல்வரிடம் கலந்து பேசி இறுதி முடிவு எடுக்கப்படும்'' என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.