ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங்‌ முன்னேற்பாடு பணிகள்‌ துவக்கம்‌

ஆசிரியர்களுக்கான இடமாறுதல்‌ கவுன்சிலிங்கை, ஒரு மாதத்‌தில்‌ நடத்த, பள்ளி கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. இதற்காக காலியிட விபரங்களை அனுப்ப உத்தரவிடப்‌ பட்டுள்ளது.

தமிழக பள்ளி கல்வித்துறையில்‌, அரசு பள்ளிகளில்‌ பணியாற்றும்‌ ஆசிரியர்களுக்கு, ஆண்டு தோறும்‌ இடமாறுதல்‌

கவுன்சிலிங்‌,'ஆன்லைன்‌' முறையில்‌ நடத்தப்படும்‌.கடந்‌தாண்டு கொராணா தொற்று பிரச்னையால்‌, பள்ளிகளை திறக்க தாமதமானதால்‌, விருப்ப இடமாறுதல்‌ கவுன்சிலிங்‌ நடத்தப்படவில்லை.


இந்நிலையில்‌, புதிதாக அமைந்துள்ள தி.மு.க., அரசு,அரசு பள்ளிகளில்‌ பணியாற்றும்‌ பட்டதாரி, முதுநிலை பட்டதாரி,சிறப்பு பாட பிரிவுகள்‌, உடற்கல்வி, கணினிஉள்ளிட்ட அனைத்து வகை ஆசிரியர்‌ பதவிகளையும்‌ காலியிட பட்டியல்,உடனேஇயக்குனரகத்தக்கு அனுப்ப அறிவுறுத்தப்‌ பட்டுள்ளது


ஆசிரியர்களுக்கான இடமாறுதல்‌ கவுன்சிலிங்கை நடத்த,பள்ளி கல்வித்துறைக்கு அனுமதி வழங்கிஉள்ளது.

இந்த ஆண்டு பள்ளிகளை திறக்கும்‌முன்‌, கவுன்சிலிங்கை முடித்து விடவும்‌ திட்டமிடப்பட்டுள்ளது.

அதற்கான முன்னேற்‌பாடு பணிகள்‌ துவங்கி உள்ளன. மாவட்டத்திலும்‌,ஆசிரியர்களின்‌ காலியிட பட்டியலைசேகரிக்க, முதன்மைகல்வி அலுவலர்களுக்கு, பள்ளி கல்வி இயக்குனரகம்‌ உத்தரவிட்டுள்ளது.


கொரோனா தொற்று குறையும்‌ நிலையில்‌,ஒரு மாதத்துக்குள்‌ அதாவது, ஜூலைக்குள்‌ஆன்லைன்‌ வழி கவுன்‌சிலிங்கை நடத்த,பள்ளி கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.