பள்ளிகளில்  இணையவழி கற்றல் வகுப்பு நடைபெறுவதற்காண வழிகாட்டுதல் நெறிமுறைகள் மற்றும் பள்ளிக் குழந்தைகளைப் பாலியல் வன்முறையிலிருந்து பாதுகாப்பது குறித்த வழிகாட்டுதல் நெறிமுறைகள் தமிழக பள்ளி கல்விதுறையால் வெளியிடபட்டுள்ளது 


Online Class Guidelines  GO NO:83 Date 17.06.2021


Online Class Guidelines  In PDF 


வழிகாட்டுதல் நெறிமுறைகள் 


👉தமிழ்நாட்டிலுள்ள அனைத்துக்கல்வி வாரியங்களைச்  அனைத்துப் பள்ளிகளுக்கும் இந்நெறிமுறைகள் பொருந்தும்.


👉பள்ளி அளவில் கண்காணிப்பு குழுவில் கீழ் கண்ட நபர்கள் இடம் பெற வேண்டும் 

  • Principal/Headmaster
  • Teachers-2 (Preferably from different levels )
  • PTA/Parent Numbers -2
  • Management Representative  -1
  • Non –Teaching staff -1
  • External Number (optional) -1

👉ஒரு மாதகாலத்தில் மாநில அளவில் ஒரு கட்டுப்பாட்டு அறையைப் பள்ளிக்கல்வித்துறை உருவாக்கும் . அனைத்துத் தரப்பினரும் தங்களது குறைகளை எளிதாகத் தெரிவிக்கும் வகையில் இம்மையத்கில் கட்டணமில்லா  தொலைபேசி  மற்றும் தனிப்பட்ட மின்னஞ்சல் வசதி உருவாக்கப்படும்.

👉மாணவர் பாதுகாப்பு ஆலோசனைக்குழு தங்களுக்கு வரப்பெற்ற எந்த வகையான புகாரையும் உடனடியாக மாநிலக் கட்டுப்பாட்டு அறைக்கு தெரியப்படுத்த வேண்டும்.

👉இந்த மையம் புகார்களைப் பதிவுசெய்வது மட்டுமின்றி, அதுசார்ந்து பின்பற்ற வேண்டிய அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் சம்பந்தப்பட்ட அமைப்புகளுக்கு வழங்கும். இம்மையத்தில் நன்கு பயிற்றுவிக்கப்பட்ட பல்துறை வல்லுநர் இருப்பர். இம்மையத்தின் தகவல் பரிமாற்றங்கள் அனைத்தும் மந்தணத் தன்மையுடன் பாதுகாக்கப்படும்.

👉பள்ளிகளைச் சார்ந்த அனைத்து அங்கத்தினருக்கும் போக்சோ   சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பாலியல் ரீதியான குற்றங்கள் குறித்த முழு புரிதல் உண்டாகும் வகையில் வருடந்தோறும் பயிற்சிகள் அளிக்க  நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பான விழிப்புணர்வு கட்டகம் பள்ளிக் கல்வித்துறையால் உருவாக்கி வழங்கப்படும்

👉இணையவழிக் கற்றல்-கற்பித்தல் நிகழ்வில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் வகுப்பறைச் சுழலுக்கேற்றுவாறு கண்ணியமாக உடை அணியவேண்டும்.

👉இணையவழிக் கற்றல்-கற்பித்தல் நிகழ்வுகளை முழுமையாகப் பதிவு செய்வதோடு, அப்பதிவுகளைக் குறிப்பிட்ட இடைவெளியில் மாணவர் பாதுகாப்பு ஆலோசனைக்குழுவைச் சேர்ந்தவர்கள் தொடர் ஆய்வு செய்யவேண்டும்.

👉புகார் மற்றும் மாணவர்களின் கருத்துக்களை எளிதாக  தெரிவிப்பதற்காகப் பள்ளி வளாகத்தில் பாதுகாப்புப் பெட்டிகள் வைக்கப்படும்.

👉மாணவர் பாதுகாப்பு ஆலோசனைக்குழு, பள்ளியில் பெறப்பட்ட அனைத்துப் புகார்களையும் பதிவு செய்யத் தனியாக ஒரு பதிவேட்டைப் பராமரிக்கும்.

👉அனைத்துப் பள்ளிகளிலும் ஒவ்வொரு வருடமும் நவம்பர் 15 முதல் நவம்பர் 22 வரை 'குழந்தைகள் துன்புறுத்தலைத் தடுக்கும் வாரம்' என விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.