Tamil Nadu  Polytechnic College Admission Instructions 2021

Tamil Nadu Government Polytechnic college முதலாமாண்டு மற்றும் பகுதி நேர சேர்கைக்கான இணையவழி விண்ணப்பம் தொடங்கும் நாள் :25/06/2021 இணையவழி விண்ணப்பம் சமர்பிப்பதற்கான கடைசி நாள் :12/07/2021 

2021 ஆம் ஆண்டு தேர்ச்சி பெற்ற எஸ்எஸ்எல்சி(SSLC) வகுப்பு மாணவர்கள் மதிப்பெண் இல்லாமலேயே முதலாமாண்டு பலவகை தொழில்நுட்ப படிப்பிற்கான விண்ணப்பங்களைப் விண்ணப்பிக்கலாம்.

Polytechnic Colleges Admission Go No 125


Government Polytechnic College List.pdf

Instructions_for_in_Tamil.pdf

Apply Online Click Here 



1.தொழில்நுட்ப கல்லூரிகள் சேரக்கை 2020-2021 யின் அதிகாரபூர்வ இணையதளத்தின் முகப்பு சென்ற உடன் மின்னஞ்சல் முகவர் ,தொடர்பு எண் , கடவுச்சொல் போன்றவற்றை  பதிவு செய்து  புதிய பயணர் கணக்க்கு தொடங்க வேண்டும் .

2. அதன் பின்பு  விண்ணப்பம் திரையில் தோன்றும்  அனைத்து தகவல்களையில் பிழையின்றை விண்ணப்பம் பூர்த்தி செய்ய வேண்டும் 

3.பதிவு செய்யப்பட்ட விண்ணப்பத்தினை சமrப்பிக்கும் முன்பு  “PREVIEW” பொத்தானை க்ளிக் செய்து உள்ளீடு செய்த விபரங்கள், தேர்வு செய்யப்பட்ட கல்லூரிகள், பாடப்பிரிவுகள் மற்றும் விண்ணப்பதாரரின் சுய மற்றும் கல்வி உள்ளிட்ட பதிவு செய்யப்பட்ட விபரங்கள் அனைத்தையும் கவனமுடன் சரிபார்க்கவும்.

4.விண்ணப்ப விவரங்களை நன்றாக சரிபார்த்த பின் பதிவுக்கட்டணத்திற்கான இணையதள பக்கத்திற்கு சென்று கட்டணத்தை செலுத்தவும்.

விண்ணப்பக் கட்டணம் செலுத்துதல்

பதிவுக்கட்டணம் செலுத்துவதற்கான இணையதள பக்கம் தங்களது கணினியில்தோன்றும். இதில் நீங்கள் கொடுத்த தகவலின்படி செலுத்த வேண்டிய கட்டணத்தொகையினைகாட்டும். இந்தத் தொகையை பற்று அட்டை கடன் அட்டை மற்றும் இணையவழி வங்கிக்கணக்கு(Credit Card/ Debit Card/ Net Banking) மூலமாக செலுத்த வேண்டும். கட்டணத்தை செலுத்தஎன்பதை க்ளிக் செய்யவும், பின் தோன்றும் கணினித்திரையில் உங்கள் தகவல்களைத் தர வேண்டும்


தமிழ் நாடு பலவகை தொழில்நுட்ப கல்லூரிகள் பட்டயப்படிப்பிற்கான முதலாம் ஆண்டு மாணவர் சேரக்கை 2020-21 இணையத்தில் சான்றிதழ்கள் பதிவேற்றம் செய்யும் வழிமுறைகள்

1. விண்ணப்பத்தினை கோப்புகளாக பதிவிறக்கம் செய்த அதே பக்கத்தில் ‘‘Certificate Upload’என்ற பொத்தானை அழுத்தி கோரப்படும் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய  வேண்டும்.

2. இணைய வழி விண்ணப்ப பதிவினை முழுமையாக முடித்து விண்ணப்ப பதிவுக்கட்டணத்தினை செலுத்திய பின்னரே இணையத்தில் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய முடியும்.

3. சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய தொடங்குவதற்கு முன்னர் தேவையான அனைத்து சான்றிதழ்களையும் Digital format  கோப்புகளாக கணிணியிலோ அல்லது திறன்பேசியிலோ சேமித்து வைத்துக்கொள்ளவும

4. சான்றிதழ்கள் அனைத்தும் PDF அல்லது Image format (JPG, PNG, JPEG)யில் இருத்தல் அவசியம். சான்றிதழின் Size 70 KB-யிலிருந்து 1MB-க்குள் இருக்க வேண்டும்.

5. விண்ணப்பதாரரின் வண்ண புகைப்படம் mage format(JPG,PNG, JPEG) ஆக 20KB யிலிருந்து 50KB-க்குள் இருக்க வேண்டும்.

6. விண்ணப்பதாரரின் கையொப்பம் Image format(JPG,PNG, JPEG) ஆக 10 KB-யிலிருந்து 40  KB-க்குள் இருக்க வேண்டும்.

7. விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப பதிவின்போது அளித்த தகவல்களுக்கேற்ப சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். பதிவேற்றம் செய்யப்படவேண்டிய சான்றிதழ்க விபரங்கள் கீழ்கண்டுள்ளவாறு வழங்கப்பட்டுள்ளது.

10 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்

மாற்று சான்றிதழ்

சாதி சான்றிதழ்

விளையாட்டு வீரர் சான்றிதழ் -பொருந்தினால்

முன்னாள் இராணுவ வீரர; சான்றிதழ்- பொருந்தினால்

மாற்றுத்திறனாளி சான்றிதழ் -பொருந்தினால்

இருப்பிட சான்றிதழ-பொருந்தினால்

வருமான சான்றிதழ்

விண்ணப்பதாரர் புகைப்பட Government Polytechnic College List.pdf

விண்ணப்பதாரர் கையொப்பம்


8. விண்ணப்பதாரர் சான்றிதழ் எண்ணினை குறிப்பிட்டு ‘Choose file’ ’ என்பதனை அழுத்திகணிணியில் உரிய கோப்புகளை தேர்ந்தெடுத்து விண்ணப்ப படிவத்தில் இணைக்கவும்.

9. இதே போல் தேவையான அனைத்து சான்றிதழ்கள், புகைப்படம் மற்றும் கையொப்பம் ஆகியவற்றை மேற்கூறிய படி பதிவேற்றம் செய்யவும்.

10. சான்றிதழ் இணைப்பு முழுமையடைந்தால் ‘SUCCESSFUL’’ என்ற பின்னூட்டம் தோன்றும்.

11. சான்றிதழ்களை பதிவேற்றம் செய்த பின்பு மாற்றங்கள் ஏதும் செய்ய இயலாது என்பதனை கவனத்தில் கொள்ளவும், எனவே உரிய சான்றிதழ்களை சரியாகவும் கவனமுடனும் உரிய இடத்தில் இணைக்கவும்

12. இதன்பின் ‘‘Certificate Upload’’ என்ற பொத்தானை அழுத்தி உங்கள் உறுதிமொழியை ஏற்று ““submit”” என்னும் பட்டனை கிளிக் செய்யவும்.

13. ‘‘Uploaded documents submitted successfully’ ’ என்ற பின்னூட்டம் தோன்றும்.