RTE-25% Admission Details -2021 - 2022
2021-2022-ஆம் கல்வியாண்டில் அனைத்து சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு நுழைவு நிலை வகுப்பில் (LKG & I std) குறைந்தபட்சம் 25% இட ஒதுக்கீடு வழங்குதல்-சேர்க்கை நடைமுறைகள் பற்றி விபரங்களை பள்ளிகளுக்கு குழந்தைகளுக்கான இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்ட மாநில முதன்மை தொடர்பு அலுவலர் மற்றும் தமிழ்நாடு மெட்ரிகுலேஷன் பள்ளி இயக்குனரின் அவர்களின் அறிவுரைகள்
2021-2022 ஆம் கல்வியாண்டில் 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கைகள் நடைமுறைப்படுத்துவதற்கான அறிவுரைகள்
👉சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் தொடக்கநிலை வகுப்பில் எல்கேஜி முதல் 1ஆம் வகுப்பு வரை பள்ளிகளில் உள்ள மொத்த இடங்கள் மற்றும் அவற்றின் 25 விழுக்காடு இடங்கள் ஆகிய விவரங்களை இணையதளம் உள்ளூர் செய்தித்தாள் ,மாவட்ட கல்வி, வட்டார அளவில் உள்ள அனைத்து கல்வி அலுவலர்களும் தகவல் பலகைகள் சம்பந்தப்பட்ட பள்ளிகள் ஆகியவற்றில் அறிவிப்பு செய்ய வேண்டும்
👉சேர்க்கைக்கு வரும் குழந்தைகளின் பெற்றோர்கள் பள்ளி கல்வித்துறையின் இணையதளத்தில் இணையம் வழியாக விண்ணப்பிக்கலாம் இணையதள முகவரி- https://rte.tnschools.gov.in/
👉பெற்றோர்கள் இணையவழியில் எங்கிருந்து வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம் மேலும் முதன்மை கல்வி அலுவலர் /மாவட்ட கல்வி அலுவலர் /வட்டார கல்வி அலுவலர் /அனைவரும் கல்வி இயக்க வட்டார வள மைய அலுவலகங்களில் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை இணையவழியில் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்/
👉இந்த இணையவழி விண்ணப்பம் 05.07.2021 முதல் 03.08.2021 வரை விண்ணப்பிக்கலாம்
விண்ணப்பிக்க- https://rte.tnschools.gov.in/
RTE admission details -இயக்குநர் செயல்முறைகள் நாள் :23.06.2021
விண்ணப்பத்திற்கான அத்தியாவசிய ஆவணங்கள்
1.Photograph of Applicant(150 px X 175 px)
2.Birth Certificate
3. AADHAR / Ration Card of Parent or Guardian
4. Income Certificate for Weaker Section Candidates
5. Community Certificate for Disadvantage Group Candidates
6. Disadvantaged Group Special Category Certificate
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..