All Teachers Come School From 02.08.2021


அரசு / நகராட்சி / மாநகராட்சி / ஊராட்சி ஒன்றிய /அரசு நிதியுதவி தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் மாணாக்கர் சேர்க்கைப் பணிகள் ,பள்ளி வகுப்பறை மற்றும் வளாகங்களை தூய்மை செய்தல் , கல்வி  தொலைக்காட்சி வாயிலாக மாணவர்கள் கற்ற பாட விவரங்களுக்கு ஏற்ப ஒப்படைப்புகள்  வழங்குதல்  ,அவற்றை மதிப்பீடு செய்தல் ,பதிவேடுகளில் பதிவு செய்து பராமரித்தல்  போன்ற பணிகளுக்கு   தலைமை ஆசிரியர்கள் மற்றும் அனைத்து ஆசிரியர்கள் 02.08.2021 முதல் பள்ளிகளுக்கு வருகை புரிந்து பணிபுரிய  தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநரின் இணை சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.


2021-22ஆம் கல்வியாண்டிற்கான பள்ளி மாணாக்கர் சேர்க்கைப் பணிகளை அரசால் தெரிவிக்கப்பட்டுள்ள பொதுவான நெறிமுறைகள் மற்றும் நிலையான செயல்பாட்டு வழிமுறைகளைப் (50%) பின்பற்றி அனைத்து தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் மாணாக்கர் சேர்க்கை தொடர்பான ஆயத்தப் பணிகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக தலைமை ஆசிரியர்களுக்கு உதவியாக, ஆசிரியர்கள் சுழற்சி முறையில் பள்ளிகளுக்கு வருகை புரிந்து பணிபுரிய தெரிவிக்கப்பட்டு இருந்தது. பள்ளிக் கல்வி ஆணையர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநரின் இணை செயல்முறைகளில்  படி கல்வி தொலைக்காட்சி ஒளிபரப்பை மாணவர்கள் பயன்படுத்துவதற்கான அறிவுரைகள், ஒப்படைப்புகள் வழங்குதல் மற்றும் ஒப்படைப்புகளை மதிப்பீடு செய்து பதிவேடுகளில் பதிவு செய்து பராமரிப்பது குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டன.

CSE And DEE Proceeding For All Teachers Come School From 02.08.2021 Pdf 

தற்போது மாணவர்கள் சேர்க்கைப் பணி, பள்ளிக் கால அட்டவணை தயாரித்தல், விலையில்லா பாடப் புத்தகங்கள் மற்றும் கற்றல் கற்பித்தலுக்கு தேவையான நலத்திட்டங்கள் வழங்குதல், பள்ளி வகுப்பறை மற்றும் பள்ளி வளாகங்களை தூய்மை செய்தல், மாணவர்கள் கல்வி தொலைக்காட்சி வாயிலாக கற்ற பாட விவரங்களுக்கு ஏற்ப ஒப்படைப்புகள்  வழங்கி அவற்றை மதிப்பீடு செய்தல் மற்றும் மதிப்பீடு செய்த விவரங்களை பதிவேடுகளில் பதிவு செய்து பராமரித்தல் போன்ற பணிகளை மேற்கொள்ளும் பொருட்டு அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் அனைத்து ஆசிரியர்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி 02.08.2021 முதல் நாள்தோறும் பள்ளிக்கு வருகை புரிந்து பணியாற்ற வேண்டும் என சுற்றறிக்கை அனுப்பியுள்ளார் 


மாற்றுத்திறனாளிகள் , புற்றுநோய் மற்றும் சிறுநீரகம் கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள், இருதய நோய் அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளவர்கள், மற்றும்  Covid 19 ஆல் பாதிக்கப்பட்டு சிகிச்சையிலிருப்பவர்கள் முதலான ஆசிரியர்கள் அரசின் நிலையான வழிகாட்டடு நெறிமுறைகளுக்கு உட்பட்டு உரிய ஆவணங்களை அளிக்கும் பட்சத்தில்,  அவர்களுக்கு பள்ளிக்கு தினமும் வருகை புரிவதிலிருந்து விலக்கு அளிக்களாம் என  தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநரின் இணை தெரிவித்துள்ளார்.