9,10,11 – No Mark In Certificate –Only Pass
9,10,11
,12 ஆம் வகுப்பு மாணாக்கர்கள் அனைவரும்.
முழு ஆண்டுத் தேர்வுகள் மற்றும் பொதுத்தேர்வுகள்
ஏதுமின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது
.
12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு
10,11 ஆம் வகுப்பு எழுத்து தேர்வு மதிபெண்கள் மற்றும் 12 ஆம் வகுப்பு செய்முறை/அகமதிப்பீடு
அடிப்படையில் மதிபெண்கள் கணக்கீடு செய்து தேர்வு முடிவுகள் 19.07.2021 அன்றும் , தற்காலிக
மதிப்பெண் சான்றிதழ் 22.07.2021 அன்று அரசு
தேர்வு இயக்கத்தால் வெளியிடப்பட்டது
இந்நிலையில் பத்தாம் வகுப்பு , மேல்நிலை முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிப்பெண் சான்றிதழ் வழங்குதல் குறித்து அரசாணை தமிழக பள்ளிகல்வி துறை வெளியிட்டுள்ளது.
அதன்படி 2020-2021-ஆம் கல்வியாண்டில் பள்ளிகளில் பத்தாம்
வகுப்பு மற்றும் மேல்நிலை முதலாமாண்டு பயிலும் மாணவர்களுக்கு தேர்ச்சிக்கான சான்றிதழ்
வழங்குதல் தொடர்பாக 08.05.2021 அன்று பள்ளிக் கல்வித் துறை அலுவலர்கள் கலந்து கொண்ட
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் 2020-21ஆம் கல்வியாண்டில்
பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை முதலாமாண்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிப்பெண்
சான்றிதழ்களில் கீழ்க்காணுமாறு அச்சிட்டு வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
9,10,11 – No Mark In Certificate –Only Pass அரசாணை (2டி)எண் :15 நாள்26.07.2021
“அரசாணை (நிலை எண் 48 பள்ளிக்
கல்வித் துறை, நாள் 25.02.2021ன்படி, 2020.-2021ஆம் கல்வியாண்டில் பத்தாம்
வகுப்பு /மேல்நிலை முதலாமாண்டு பயின்ற அனைத்து தேர்வர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி மேற்காண் தேர்வர் பின்வரும் அனைத்துப்
பாடங்களிலும் தேர்ச்சி பெற்றுள்ளார் எனச் சான்றளிக்கப்படுகிறது” என்ற வாசகத்தை அச்சிட்டு, ஒவ்வொரு பாடத்திற்கும் மதிப்பெண்களை
பதிவு செய்வதற்கான கலத்தில் மட்டும் மதிப்பெண்களுக்கு பதிலாக தேர்ச்சி (PASS) என
பதிவு செய்து சான்றிதழ் வழங்கலாம். என தெரிவிக்கப்பட்டுள்ளது
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..