Government Arts And Science College Admission -2021



தமிழ் நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2021 கல்வியாண்டிற்கான  மாணவர் சேர்க்கைகாண இணையவழி விண்னப்பம் 26.07.2021 முதல் துவங்கும்  என  கல்லூரி இயக்குநர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள 143 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள இளநிலை பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணாக்கர் சேர்க்கைக்கான (2021-2022) விண்ணப்பங்களை www.tngasa.org மற்றும் www.tngasa.in  என்ற இணையதள முகவரிகளில் பதிவு செய்யலாம். 

இணையதள வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணாக்கர்கள் கல்லூரி உதவி மையங்கள் (Admission Facilitation Centre - AFC)  விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

TN Government Arts And Science College Admission -2021 Date 

  • இணையதள வாயிலாக விண்ணப்பம் பதிவு செய்யத் துவங்கும் நாள் 26.07.2021
  • இணையதன வாயிலாக விண்ணப்பம் பதிவு செய்ய இறுதி நாள் 10.08.2021

Instructions In Tamil 

TAMIL NADU GOVERNMENT ARTS AND SCIENCE COLLEGES ADMISSIONS (TNGASA) - 2021 - Booklet  In Tamil

List of Colleges in Pdf 


ஒரு கல்லூரிக்கு விண்ணபப்ப கட்டணவிபரம் 

விண்ணப்பக் கட்டணம் - ரூ.48/- , பதிவுக் கட்டணம் - ரூ.2/- 

SC/ST பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் ஏதுமில்லை ,பதிவுக் கட்டணம் -- ரூ.2/- மட்டும்

விண்ணப்பம் மற்றும் பதிவுக் கட்டணம் : விண்ணப்பக் கட்டணம் மற்றும் பதிவுக் கட்டணத்தை விண்ணப்பதாரர்கள்  Debit card/Credit card/Net Banking மூலம் இணையதள வாயிலாக செலுத்தலாம்.

இணையதள வாயிலாகக் கட்டணம் செலுத்த இயலாத மாணாக்கர்கள் கல்லூரி சேர்க்கை உதவி மையங்களில் “The Director, Directorate of Collegiate Education, Chennai — 6” என்ற பெயரில் 26/07/2021 அன்று அல்லது அதற்குப் பின்னர் பெற்ற வங்கி வரைவோலை அல்லது நேரடியாகவும் செலுத்தலாம்.