Tamil Nadu Engineering Admission -2021
தமிழகத்தில் பொறியியல் படிப்பில் சேருவதற்கு நாளை26.07.2024 முதல் ஆகஸ்ட் 24 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என, தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
தமிழக பள்ளிக்கல்வியின் பாடத் திட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த மே மாதம் நடக்க இருந்தது. கரோனா 2-வது அலை பரவலின் தீவிரம் காரணமாக, தேர்வு ரத்து செய்யப்பட்டு, மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி செய்யப்படுவதாக அரசு அறிவித்தது.
10, பிளஸ் 1 பொதுத் தேர்வு மதிப்பெண்களில் 70 சதவீதம், பிளஸ் 2 செய்முறைத் தேர்வில் 30 சதவீதம் என்ற விகிதத்தில் மாணவர்களுக்கு இறுதி மதிப்பெண் கணக்கிடப்பட்டுள்ளது பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த 19-ம் தேதி வெளியிடப்பட்டது. அதனை தொடர்ந்து மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதல் இணையம் வழியாக 22.07.2021 முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளாம் என பள்ளிகல்விதுறை அறிவித்தது .
இந்நிலையில், ஜூலை 26 முதல் (நாளை) ஆகஸ்ட் 24-ம் தேதி வரை, பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.
அதன்படி, பி.இ, பி.டெக். பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேருவதற்கு நாளை (ஜூலை 26) முதல் www.tneaonline.org அல்லது www.tndte.gov.in என்ற இணையதளத்தில் ஆகஸ்ட் 24 வரையில் விண்ணப்பிக்கலாம்.
TNEA 2021 Registration& important dates :
- இணைய வழி விண்ணப்பம் தொடங்கும் நாள் :26.07.2021
- இணைய வழி விண்ணப்பம் ,சான்றிதழ் பதிவேற்றம் செய்ய கடைசிநாள் :24.08.2021
- ரேண்டம் எண் வெளியாகும் நாள்:25.08.2021
- தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும் நாள்:04.09.2021
- கலந்தாய்வு நடைபெறும் நாள் :செப்.7 முதல் அக்.20 வரை
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..