Basic computer Training For Teachers Postponed 

02.08.2021 முதல் ஆசிரியர்களுக்கு நடைபெறவிருந்த அடிப்படை கணினி பயிற்சி ஒத்திவைப்பு - திருத்தி அமைக்கப்பட்ட அட்டவணை விரைவில் வெளியிடப்படும் - ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்குநர் உத்தரவு


தற்பொழுது கருத்தாளர்‌ பயிற்சியில்‌ பங்கேற்றுள்ள 447 நபர்களுக்கும்‌ பயிற்சியினை மேம்படுத்தும்‌ நோக்கில்‌ மீண்டும்‌ பயிற்சி அளிக்கப்படவுள்ளது. 

 6029 உயர்‌ தொழில்‌ நுட்ப ஆய்வகத்தின்‌ பொறுப்பு ஆசிரியர்கள்‌ மற்றும்‌ 447 கருத்தாளர்களுக்கும்‌ 2.8.21 முதல்‌ 6.8,21 வரை இணையவழியாக  பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இணைய வழியாக அடிப்படை கணினி பயன்படுத்துதல்‌,திறன்‌ வளர்‌ பயிற்சி 2.8.21 முதல்‌ நடைபெறுவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. இப்பயிற்சிக்கான திருத்தி அமைக்கப்பட்ட கால அட்டவணை பின்னர்‌ மாவட்டங்களுக்கு தெரிவிக்கப்படும்‌.

447 Corrected final RP LIST  30_7_21 pdf