கொரானா பரவல் காரணமாக ஜனவரி 2020 ,  ஜூலை 2020   ,ஜனவரி 2021 , போன்ற காலங்களில் உயர்த்தப்பட்ட வேண்டிய அகவிலைப்படி  மத்திய அரசானது நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை அறிவித்துள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 17 சதவீதத்தில் இருந்து 28 சதவீதமாக உயர்வு

பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 11% அகவிலைப்படி உயர்வு என ஒப்புதல் அளித்துள்ளது.

 அதன்படி, மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 17% இருந்து 28 % ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
அகவிலைப்படி உயர்வு வரும் ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வருவதாகவும், 01.01.2020 முதல்  30.06.2021     வரை அகவிலைப்படி 17% இருக்கும் என மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்குர் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்புக்காக பல மாதங்களாக காத்திருக்கும் லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மத்தியில் இந்த அறிவிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.