JEE Main Exam starting from July 20th

JEE Main Exam  ஜூலை 20 முதல் தொடங்கப்படும் என மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளார்.

JEE Main Exam  மூன்றாம் கட்ட தேர்வு ஜூலை 20 முதல் 25 தேதி வரை நடத்தப்படும்.

JEE Main Exam  நான்காம் கட்ட தேர்வு ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 2ஆம் தேதி வரை நடத்தப்படும்.

மேலும், கரோனா விதிமுறைகளை பின்பற்றி மாணவர்களின் பாதுகாப்பிற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள தேசிய தேர்வு முகமைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

பொறியியல் படிப்புகளுக்காக நடத்தப்படும் ஒருங்கிணைந்த நுழைவுத் தோவான ஜேஇஇ மெயின் தோவு இரண்டு முறை ஒத்தி வைக்கப்பட்டது.

ஜேஇஇ மெயின் தேர்வு ஆங்கிலம், ஹிந்தி, தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் ஆண்டுக்கு 4 முறை நடத்தப்படுகிறது. முதல் கட்டமாக பிப்ரவரி மாதமும் அதைத் தொடா்ந்து மார்ச் மாதத்திலும் தோவு நடைபெற்றது.