SSLC Provisional Certificate Download Instruction

பத்தாம் வகுப்பு மாணவர்களின் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை 23.08.2021 முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் - அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு!

அரசுத் தேர்வுகள் இயக்ககம்,  வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2021 – தேர்வு முடிவுகள் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் பதிவிறக்கம் செய்வது தொடார்பாக சுற்றறிக்கை அனுப்பியுள்ளது அதன்  படி 

அரசாணை (நிலை) எண்.48 பள்ளிக் கல்வித் (அ.தே) துறை, நாள். 25.02.2021-ன் அடிப்படையில், பள்ளி மாணவர்களுக்கு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2021 தொடர்பான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை 23.08.2021 தேதி அன்று காலை 11.00 மணி முதல் 31.08.2021 தேதி வரை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். 

மாணவர்களுக்கு பிறந்த தேதி, தேர்வெண் ஆகியவற்றை அவர் தம் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழி படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைப்பேசி எண்களுக்கு குறுஞ்செய்தி வழியாக அரசுத் தேர்வுத் துறையின் மூலம் 21.08.2021 தேதி அன்று காலை 11.00 மணிக்கு அனுப்பி வைக்கப்படும்  என தெரிவித்துள்ளது 

மேலும் பள்ளி மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில்,   வழியாக 23.08.2021 தேதி அன்று காலை 11.00 மணி முதல் 31.08.2021 தேதி வரை தங்களுக்கான Roll No,, பிறந்த தேதி ஆகிய விவரங்களை பதிவு செய்து, தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்  என தெரிவித்துள்ளார்.