பள்ளி திறப்புக்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை - நாள்: 26.08.2021.

Sop For School Reopen-Disaster  Management Date:26.8.2021

வாரத்திற்கு 6 நாட்கள் பள்ளிகள் இயங்கும் என்று அறிவிப்பு

ஒரு வகுப்பறையில் 20 மாணவர்களை மட்டுமே அமர வைக்க வேண்டும்
மாணவர்களை அமர வைப்பதில் சமூக இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும்

"கூடுதல் வகுப்பறைகள் இல்லாவிட்டால், மீதமிருக்கும் மாணவர்களுக்கு மற்றொரு நாளில் Schoolவகுப்பு நடத்த வேண்டும்"

ஆசிரியர்கள், மாணவர்கள், ஊழியர்கள் என அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும்


 50% மாணவர்களுக்கு சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்த வேண்டும்

• வாரத்தில் 6 நாட்களுக்கு பள்ளிகள் செயல்பட வேண்டும்

• ஆன்லைன் வகுப்புகளைத் தொடர வேண்டும்

• ஆன்லைன் வகுப்பில் மட்டும் பங்கேற்க விரும்பும் மாணவர்களுக்கு பள்ளிகள் அனுமதி தர வேண்டும்

• வகுப்பறையில் 20 மாணவர்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்

• வெப்பநிலை பரிசோதனை, முகக்கவசம் அணிதல், கிருமிநாசினி தெளித்து அடிக்கடி சுத்தம் செய்தல், தனி மனித இடைவெளியை பின்பற்றுதல், கூட்டம் சேராமல் தடுத்தல் போன்றவை கட்டாயமாக பின்பற்றப்பட வேண்டும்

• பயோமெட்ரிக் வருகைப் பதிவேடை பயன்படுத்தக் கூடாது

• ஆசிரியர்கள், பணியாளர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்

• விளையாட்டு, இறைவணக்கக் கூட்டம், நிகழ்ச்சிகள் நடத்தக் கூடாது

• கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள பள்ளிகளை திறக்கக் கூடாது

• பெற்றோர்கள் கொரோனா அறிகுறி உள்ள மாணவர்களை பள்ளிக்கு அனுப்பக் கூடாது

• குளிர்சாதனத்தை பயன்படுத்தக் கூடாது

• வெளியாட்களை அனுமதிக்கக் கூடாது

• திறந்தவெளி வகுப்புகளை நடத்தலாம்

• மாணவர்களின் மனநலன், உடல்நலனை சோதிக்க மருத்துவர் அல்லது செவிலியர் முழு நேரமாக பள்ளியில் இருக்க வேண்டும்

• அறிகுறி உள்ள மாணவர்களை தனிமைப்படுத்த ஏதுவாக தனி அறை வசதி இருக்க வேண்டும்

• சுகாதாரத்துறை சார்பில் பள்ளிகளில் நடமாடும் சுகாதார முகாம்கள் அடிக்கடி நடத்தப்பட வேண்டும்

• பள்ளிப் பேருந்துகள், வேன்கள், விடுதிகளிலும் அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளும் பின்பற்றப்பட வேண்டும்

மேற்கண்ட நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி பள்ளிகளைத் திறக்கலாம் என்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அரசாணை வெளியிட்டுள்ளது.