உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேரம் காலை 7.00 மணி முதல் மாலை 7.00 மணிவரை   - மாநில தேர்தல் ஆணையம் 


உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேரம் நிர்ணயம்  செய்து தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் ஆணை வெளியிட்டது.


புதியதாக அமைக்கப்பட்ட செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், இராணிபேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரணத் தேர்தல்கள் மற்றும் 2019-ல் தேர்தல் நடத்தப்பட்ட 28 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் 30.06.2021 வரை ஏற்பட்டுள்ள காலி பதவியிடங்களுக்கு நடைபெறவுள்ள தேர்தலுக்கான வாக்குப்பதிவினை வாக்குப்பதிவு நாளன்று காலை 7.00 மணி முதல் மாலை 7.00 மணிவரை நடத்திட தமிழ்நாரு மாநில தேர்தல் ஆணையம் நிர்ணயம் செய்து 1.9.2021 ௮ன்று ஆணை வெளியிட்டுள்ளது. 


கோலிட் - 19 பெருந்தொற்றின் காரணமாக தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிடவும், நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வாக்குப்பதிவனை நடத்திடவும் கூடுதல்  நேரம் வழங்கி மாநில தேர்தல் ஆணையம் ஆணை வெளியிட்டது