NMMS - Problems & Solutions.

NMMS தேர்ச்சி - இணையதளத்தில் பதிவுகள் மேற்கொள்ளும் போது ஏற்படும் பிரச்சனைகளும்  அதற்கான தீர்வுகளும்

1.SCHEME NOT Available 

  • மாணவ மாணவியரது பெயர் NMMS  தேர்வு நுழைவுச் சீட்டில் அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களின் பெயர் பட்டியலில் உள்ளது போல் இருக்கவேண்டும். அதில் உள்ளது போலவே ஆதார் அட்டையிலும் இருக்க வேண்டும். எனவே பெயர் சரிபார்த்து இரண்டிலும் ஒன்று போல இருந்தால் இந்த பிரச்சனை ஏற்படாது.
  • அவ்வாறு ஆதார் அட்டையிலும் மாணவர் தேர்ச்சி  அறிக்கையிலும் பெயர்மாறுபட்டு இருந்தால் ஆதாரை அடிப்படையாக கொள்ளாமல் |DENTIFICATION DETAILS என்பதில் வங்கி பாஸ் புத்தகத்தை ஸ்கேன் செய்து அதனை அடிப்படையாக கொண்டு பதிவேற்றம் செய்து விண்ணப்பித்தால் இந்த பிரச்சனை ஏற்படாது.
  • அதேபோல் மாணவரது பள்ளியின் ஆவணங்களின்படி பிறந்ததேது ஒன்றும் NMMS  தேர்வு அறிக்கையில் அல்லது நுழைவுச்சிட்டில் ஒன்றும் இருப்பின், உண்மையான பள்ளியின் ஆவணங்களின்படியான பிறந்த தேதியை பதிவிடாமல் நுழைவுச் சீட்டில் உள்ள பிறந்த தேதியை பதிவிட்டால் இப்பிரச்சனை ஏற்படாது.
  • மாணவரது விவரங்களை முதன்முதலில் பதிவு செய்யும் போது Scholarship  Scheme என்பதற்கு பதிலாக Incentive Scheme  என்று தேர்ந்தெடுத்தால் அம்மாணவருக்கு வரும் ID IN  என்று ஆரம்பிக்கும் இதிலும் இந்த பிரச்சனை ஏற்படும். எனவே அம்மாணவாது விண்ணப்பத்தை திரும்ப பெற்று மீண்டும் சரியான முறையில் தேர்ந்தெடுத்து விண்ணப்பிக்கவேண்டும்.
  • மாணவர்களின் விண்ணப்பத்தில் விவரங்களை உள்ளீடு செய்யும்போது COMPETITIVE EXAM PASSED   என்ற  இடத்தில்  NMMS என தேர்ந்தெடுத்து அதன் அடுத்த கட்டத்தில் மாநிலம் தமிழ்நாடு என்றும் மாணவரது தேர்வு எண் தேர்ச்சி அறிக்கையில் உள்ள எண்ணையும் ஆண்டு என்ற இடத்தில் தேர்வு எழுதிய கல்வி ஆண்டு(2019) என்றும் சரியாக குறிப்பிட்டால் இப்பிரச்சனை எழாது.
  • மாணவரது குடும்ப ஆண்டு வருமானம் 1,50,000ககு அதிகமாக உள்ளீடு செய்தால் இப்பிரச்சனை ஏற்படும்.
  • மாணவரது கடந்தாண்டு மதிப்பெண்  பதியும்  போதும் உரிய அளவில் இல்லையெனில் இப்பிரச்சனை ஏற்படும்.


 How To NMMS Fresh/ Renewal instruction In NPS -2021


2. கண்டிப்பாக விண்ணப்பிக்கும் அனைவருக்கும் Bonafide Certificate  பதிவிறக்கம்செய்து மார்பளவு புகைப்படம் ஒட்டி தலைமையாசிரியர் கையொப்பம் மற்றும்அவரின் முத்திரை மற்றும் பள்ளியின் முத்திரை இட்டு அதனை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்யவேண்டும். இல்லையெனில் விண்ணப்பம் நிராகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது.

3. 9ஆம் வகுப்பில் முதன்முதலில் விண்ணப்பித்த பிறகு அடுத்த ஆண்டுகளில் அவ்விண்ணப்பங்கள் புதுப்பிக்கபடவேண்டும். ஓராண்டு புதுப்பிக்க தவறினாலும் அதன் பிறகு புதுப்பிக்க முடியாது. எனவே தவறாமல் 10,11 மற்றும் 12ஆம் வகுப்பில் விண்ணப்பங்கள் புதுப்பிக்கப்படவேண்டும்.


4. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க அல்லது புதுப்பிக்க வேண்டுமெனில் அம்மாணவர் அரசு அல்லது அரசு உதவி பெறும் பள்ளிகளில் மட்டுமே 9,10,11  மற்றும் 12 ஆம் வகுப்பு பயில் வேண்டும் 


5. மாணவர் அளவில் விண்ணப்பங்களை பஇவேற்றம் செய்து சமர்பித்தப்பின் அதன் விண்ணப்ப நகலை அச்செடுத்து வைத்துக்கொள்ளவேண்டும்.


6. மாணவர்களுக்கு விண்ணப்பிக்கும் போது வழங்கப்படும பெற்றோர்களின் கைபேசி எண் மிக முக்கியமாக அடுத்த 4 ஆண்டுகளுக்கும் வைத்திருக்கவேண்டும். ஏனெனில் பிற்காலத்தில் அந்த எண்ணிற்குதான் விவரங்கள் அனுப்பபடுவதுடன் புதுப்பிப்பதற்கும் தேவைப்படும்.


7. பள்ளிக்கான பயனாளர் சொல் மற்றும் கடவுச்சொல் கண்டிப்பாக உரியபதிவேடுகளில் எழுதப்பட்டு பராமரிக்கப்படவேண்டும். இல்லையெனில் அடிக்கடி  அது மறந்து போவதாலோ அல்லது உரிய ஆசிரியர் மாற்றம் பெற்று சென்றால் அது தெரியாமல் போய்விடுகிறது. மேலும் மறு கடவுச்சொல் பெற முயற்சித்தாலும் பலநேரங்களில் OPT வருகிறது, ஆனால் உள்நுழைய முடியவதில்லை.


8. மாணவர் விண்ணபித்தபின் பள்ளியின் பயனாளர் சொல் மற்றும் கடவுச்சொல் கொடுத்து உள்நுழைந்து மாணவர்களின் விண்ணப்பங்களை நாம் சரிபார்த்து அடுத்த நிலைக்கு அனுப்பினால் மட்டுமே பள்ளி அளவிலான பணி முடந்ததாக பொருள்.


9. வங்கக் கணக்கு எண் குறைந்தது 9 இலக்கங்களுக்கு குறையாமல் இருக்க வேண்டும். ஆரம்ப எண் 0 என்று இருப்பின் கண்டிப்பாக அதனையும் உள்ளீடு செய்ய வேண்டும்.இவைகள் அனைத்தையும் சரியாக செய்தும் மாணவரது வங்கிக்கணக்கிற்கு பணம் வரவில்லை என்ற பிரச்சனை ஏற்படுகிறது. வங்கிக் கணக்கு ZERO Balance  கணக்கு துவக்கப்பட்டால் அதன் காலம் 3 ஆண்டுகள் இருக்கும். ஆனால் நடைமுறையில் எந்த வங்கியும் இதனை செய்யாமல் ரூ,200 அல்லது 500 பெற்று கணக்கு துவங்கப்படுவதால் அதில் மாணவர் குறைந்தது 3 மாதத்திற்கு ஒருமுறை பணம் செலுத்துதல் அல்லது பணம் எடுத்தல் நடவடிக்கை செய்தால் மட்டுமே வங்கிக் கணக்கு செல்லத்தக்க நிலையில் இருக்கும்.


10. தகுதியுள்ள மாணவர்க்கு ஏதோ ஒரு காரணத்தால் பணம் இடைக்கவில்லை எனில் இதில் இணைக்கப்பட்மருக்கும் கடிதத்தைப்போன்று தயாரித்து டில்லியில் உள்ள MHRD அனுப்பினால் உரிய தொகை சரிபார்க்கப்பட்டு மாணவர் வங்கு கணக்கில் வரவு வைக்கப்படும்.