CTET தேர்வுக்கு  செப்.20 முதல் விண்ணப்பிக்கலாம்

CTET  எனப்படும் மத்திய ஆசிரியா் தகுதித் தேர்வுக்கு வரும் செப்.20-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது 

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSC) சாா்பில் 'CTET' எனப்படும் மத்திய ஆசிரியா் தகுதித் தேர்வு நாடு முழுவதும் வரும் டிச.16-ஆம் தேதி முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 13-ஆம் தேதி வரையிலான நாள்களில் கணினி வழித் தோவாக 20 மொழிகளில் நடைபெறவுள்ளது. 

CTET  தோவுக்கான பாடத்திட்டம், தேர்வில் பங்கேற்பதற்கான வயது வரம்பு, தோவுக் கட்டணம், தேர்வு நடைபெறும் நகரங்கள் உள்ளிட்ட விவரங்களை இணையதள முகவரியில் திங்கள்கிழமை (செப்.20) முதல் காணலாம். இதனை பதிவிறக்கம் செய்து அதில் கூறப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றி 'CTET' தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.


இணையவழி விண்ணப்பம் தொடங்கும்  நாள் 

இந்தத் தோவுக்கு தகுதியான நபா்கள் 'CTET' வலைதள முகவரியில் மட்டுமே செப்.20-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அக்டோபா் 19-ஆம் தேதிக்குள் இணையவழியில் சமா்ப்பிக்க வேண்டும்.. 


தேர்வு நடைபெறும் நாள் விபரம் 

  • டிச.16-ஆம் தேதி முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 13-ஆம் தேதி வரை


விண்ணப்பகட்டணம் விபரம் 

  • பொதுப் பிரிவினருக்கு ஏதாவது ஒரு தாள் மட்டும் எழுத ரூ.1,000, இரண்டு தாள்களையும் சோத்து எழுத ரூ.1.200 கட்டணமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. 
  • எஸ்சி, எஸ்.டி. பிரிவினா், மாற்றுத் திறனாளிகள் ஏதாவது ஒரு தாள் மட்டும் எழுத ரூ.500, இரண்டு தாள்களையும் எழுத ரூ.600-ஐ விண்ணப்பக் கட்டணமாகச் செலுத்த வேண்டும்
  • அக்.20-ஆம் தேதி வரை விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தலாம்