கனமழை காரணமான 30.10.2021 பள்ளி விடுமுறை

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியதையடுத்து, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. 

கடலூர், சேலம், தருமபுரி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான முதல் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. எனசென்னை வானிலை ஆய்வு மையம்  தெரிவித்த  நிலையில் கீழ் கண்ட மாவட்டங்களுக்கு  அந்த அந்த மாவட்ட ஆட்சியர்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளனர்.

விடுமுறை அறிவிக்கபட்ட மாவட்டம் விபரம்

  • கடலூர் மாவட்டம்
  • திருவாரூர் மாவட்டம் 
  • புதுக்கோட்டை மாவட்டம்
  • நெல்லை மாவட்டம்
  • தூத்துக்குடி மாவட்டம் 
  • கன்னியாகுமரி மாவட்டம்

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் கனமழை காரணமாக பள்ளி மற்றும் கல்லுரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு