9 to 12 Refresher Course Online Exam In High Tech Lab


9 முதல்12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு புத்தாக்க பயிற்சி பாடத்திட்டத்தின் அடிப்படையில்  உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகத்தில் மாநில அளவிலான மதிப்பீட்டு தேர்வு நடத்துதல் சார்ந்து பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்!


CSE - 9 to 12 Refresh Course Online Exam In High Tech Lab 


9 முதல் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களின் கற்றலை மேம்படுத்த புத்தாக்கப் பயிற்சி கட்டகம் வழங்கப்பட்டு  மாணவர்களுக்கு கற்றல் செயல்பாடு நடைபெறுகிறது .

முதல் கட்டமாக புத்தாக்கப் பயிற்சிக் கட்டகத்தில் 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளுக்கு தமிழ் , ஆங்கிலம் , கணிதம் , அறிவியல் மற்றும் சமூக அறிவியல் ஆகிய பாடங்களுக்கும் . ஒவ்வொரு பாடத்திற்கும் பாட வாரியாக 60 கொள்குறி மதிப்பீட்டு வினாக்கள் கேட்க்கப்படும்.

  11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு தமிழ் , ஆங்கிலம் , கணிதம் , இயற்பியல் , வேதியியல் , தாவரவியல் , உயிரி தாவரவியல் , விலங்கியல் , உயிரி விலங்கியல் , வரலாறு , பொருளியல் , கணக்குப்பதிவியல் , வணிகவியல் , கணினி அறிவியல் மற்றும் கணினி பயன்பாடுகள் ஆகிய பாடங்களுக்கும் ஒவ்வொரு பாடத்திற்கும் பாட வாரியாக 60 கொள்குறி மதிப்பீட்டு வினாக்கள் கேட்க்கப்படும்

இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையின்படி 9 முதல் 12 - ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு உயர்தொழில் நுட்ப ஆய்வகம் ( HighTech Lab ) மூலம் மதிப்பீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது . 


9 to 12 Refresher Course Online Exam Time Table 




அதன்படி அனைத்து தலைமை ஆசிரியர்களும் இந்த மதிப்பீட்டை 12.10.2021 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணிக்குள் உயர்தொழில் நுட்ப ஆய்வகத்திலுள்ள ( Hitech lab ) கணினிகளின் எண்ணிக்கைக்கேற்ப ஒவ்வொரு குழுவினருக்கும் மாணவர் EMIS LOG IN மற்றும் PASSWORD ஆகியவற்றை பயன்படுத்தி ஒரு மணி நேரம் கால அவகாசம் அளித்து நடத்திட வேண்டும் 


உயர்தொழில் நுட்ப ஆய்வகம்  முன்னேற்பாடுகள் மற்றும் பணிகள் குறித்த வழிகாட்டுதல் .

1. மாணவர்கள் பள்ளியிலேயே தேர்வு எழுதுவதற்கு ஏற்ற வகையில் சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர்கள் இணையதள வசதியுடன் கணினி வளங்களை தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும்.

2. அரசு உயர்நிலை /மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள அனைத்து கணினி வளங்களையும் பயன்படுத்திப் பள்ளியில் பயிலும் மாணவர்களைத் தேவைக்கேற்ப அமரவைத்து தேர்வை நடத்த வேண்டும். அனைத்து மாணவர்களையும் இணைய வழியாக தேர்வில் பங்கேற்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

3. பள்ளியில் உள்ள கணினி/ மடிக்கணினி / TAB எண்ணிக்கைக்கு ஏற்ப மாணவ மாணவியரைத் தேர்வில் ஈடுபடுத்த வேண்டும். தேர்வு நேரம் 60 நிமிடம் முடியும் வரை தேர்வை நடத்தி முடிக்க வேண்டும்.

4, ஒரு மாணவர் தேர்வு முடித்த பின்பு தொடர்ந்து அடுத்த மாணவரை தேர்வு எழுத அனுமதிக்கலாம்.

5. காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை தொடர்ந்து வினாத்தாள் Live ஆகஇருக்கும்.

6. அனுமதிக்கப்பட்ட வினாத்தாள் ஒரு நாள் முழுவதும் LIVE ஆக இருப்பதால் ஒரு  மாணவர் எப்போது தொடங்கினாலும் 60 நிமிடத்திற்குள் முடிக்கும் படியாக இருத்தல்வேண்டும்.

7. தேர்வு நடத்தும் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு Log in செய்தல் செய்தல்,  Online Refresh போன்ற TechniCal  உதவி மட்டுமே செய்ய வேண்டும். வினா விடை சார்ந்து எந்த உதவியும் செய்யக்கூடாது.

8. பள்ளிகளில் உறுதி செய்யப்பட வேண்டிய கணினி வளங்கள். ,Hi-Tech Lab, Computer lab.


9 to 12 Refresher Course Online Exam தேர்வு நடத்தப்படும் URL Link 

இணையதளத்தில் உள்நுழைந்தவுடன் மாணவர்களின் EMIS ID-login ID ஆகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதற்கு Password மாணவர்களின் EMIS  ID-ல் கடைசி நான்கு இலக்கம்@ மாணவரின் பிறந்த ஆண்டினை கொடுத்து உள் நுழைய வேண்டும். 

URL -http://exams.tnschools.gov.in/

Example 

Login ID : 3390xxxx0400018 (Student EMIS ID )

PWD : 0018@2006  (EMIS ID last 4 Digit @Birth Year)