DEE - School Reopening Instruction 


01.11.2021 முதல் பள்ளிகள் தொடங்குதல் - பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்த தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!!!

 DEE - School Reopening Instruction  in pdf 

1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு மாணவ மாணவியருக்கான நேரடி வகுப்புகள் கொரோனா நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி 01.11.2021 முதல் நடத்த அனுமதிக்கப்படும் .

எனவே, தொடக்கக் கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ் செயல்படும் அனைத்து வகை பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகளை பின்வரும் அறிவுரைகளைப் பின்பற்றி செயல்படுத்துமாறு தொடக்கக் கல்வி இயக்குநரின் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

கல்விசார் செயல்பாடுகள்

  • நீண்ட இடைவெளிக்குப் பின்னர் மாணவர்கள் நேரடி வகுப்பில் பங்கு பெற வருகை புரிவதால் அவர்களை உளவியல் ரீதியாக தயார்படுத்தி எளிதில் அணுகுவதற்கு தேவையான நடவடிக்கைகளை ஆசிரியர்கள் மேற்கொள்வதை உறுதி செய்திடல் வேண்டும்.
  •  நேர்மறை சிந்தனைகள் மற்றும் வாழ்வியல் அனுபவங்களை பகிர்ந்து கொள்ள வாய்ப்புகள் வழங்கப்பட்டு பள்ளிச் சூழல் இனிமையானதாகவும் மகிழ்ச்சி நிறைந்ததாகவும் மாற்றப்படுவதை உறுதி செய்திடல் வேண்டும்.
  • அரசால் வழங்கப்படும் புத்தாக்கப் பயிற்சி கட்டகத்தின் ( Refresher Course Module) துணை கொண்டு குறிப்பிட்ட காலம் வரையில் மாணவர்களை ஆசிரியர்கள் ஆயத்தம் செய்வதை உறுதி செய்திடல் வேண்டும்.
  • வாய்மொழிப் பயிற்சி, எழுத்துப் பயிற்சி, கதைகள் கூறுதல் மற்றும் ஓவியம் வரைதல் போன்ற செயல்பாடுகள் ஊக்குவிக்கப்படுவதை உறுதி செய்திடல்
  • கல்வி தொலைக்காட்சி ஒளிபரப்பு நிகழ்ச்சிகளை மாணவர்கள் காண்பதற்கு உரிய ஆலோசனைகள் ஆசிரியர்களால் வழங்கப்பட்டு நடைமுறைப் படுத்தப்படுவதை உறுதி செய்திடல் வேண்டும்.
  • பள்ளி மேலாண்மைக் குழு கூட்டத்தினை தலைமை ஆசிரியர்கள் நடத்திடவும் அக்கூட்டத்தில் எவ்வாறு பாதுகாப்பான  செயல்பாடுகளை மாணவர்களுக்கு வழங்குவது என்பது குறித்து விவாதித்து தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்திடல் வேண்டும்.

பள்ளித் திறப்பு மற்றும் கற்றல் நடவடிக்கைகளில் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களின் பங்கு

ஆசிரியர்கள்


  • ஒவ்வொரு பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் அனைத்து வகையிலும் அப்பள்ளியில் பயிலும் மாணவர்களின் பாதுகாப்பிற்கு முழு பொறுப்பு வாய்ந்தவர்கள் ஆவர்.
  • மாணவர்களிடத்தில் தன் சுத்தம் மற்றும் கொரோனா நோய் தடுப்பு பாதுகாப்பு அணுகுமுறைகள் குறித்து பள்ளியின் தலைமை சிரியர் ஆசிரியர்கள் தேவையான விழிப்புணர்வினை வழங்கிட வேண்டும்.
  • ஒவ்வாரு ஆசிரியருக்கும் காரோனா நோய் தடுப்பு மற்றும் பாதுகாப்பான கற்றல் சூழலுக்கு உரிய வேலை ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.
  • இணைப்பு பாடப்பயிற்சி கட்டகம் ( Bridge Course material), குறைக்கப்பட்ட பாடங்கள் மற்றும் அடிப்படை பாடங்களுக்கு மாணவர்களை தயார் செய்தல்
  • பள்ளிகளில் உள்ள கற்றல் - கற்பித்தல் உபகரணங்களை மாணவர்கள் பயண்படுத்தி கற்றிட திட்டமிட்டு வாய்ப்பு வழங்குதலை உறுதி செய்திடல்
  • கற்றல் - கற்பித்தல் பணியானது மகிழ்ச்சி நிறைந்ததாகவும் மாணவர்கள் விரும்பத்தக்கதாகவும் செய்திடல் வேண்டும்.

ஆசிரியப் பயிற்றுநர்கள்


  • ஆசிரியப் பயிற்றுநர்கள் தங்களுக்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட பள்ளிகள் அனைத்திற்கும் நேரடியாக சென்று பள்ளிகளின் ஆயத்த நிலை குறித்த விவரங்களை தமது உயர் அலுவலர்களுக்கு தெரிவித்திடல் வேண்டும்.
  • மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் எளிமையான கற்றல் வாய்ப்பிற்கு ஆசிரியர்களுக்கு தேவையான உதவிகளை செய்திடல் வேண்டும்.
  • வழிகாட்டுதல்கள் மற்றும் ஆலோசனைகள் தேவைப்படும் குழந்தைகளை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்திடல் வேண்டும்.

பாதுகாப்பு முன்னேற்பாடுகள்


  • ஒவ்வொரு பள்ளியிலும் தேவைக்கு ஏற்ப போதுமான அளவில் முகக் கவசம் இருப்பதை உறுதி செய்திடல் வேண்டும்.
  • ஒவ்வாரு பள்ளியிலும் போதுமான அளவில்  Hand Sanitizer  கொண்டுகைகளை சுத்தம் செய்வதற்கு ஏற்றவாறு வசதிகள் செய்யப்பட்டு இருப்பதை உறுதி செய்திடல் வேண்டும்.
  • ஒவ்வொரு பள்ளியின் நுழைவாயிலிலும் மாணவர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை (தெர்மல் ஸ்கேனர் மூலம்) எடுக்க தேவையான வசதிகள் செய்யப்பட்டு இருப்பதை உறுதி செய்திடல் வேண்டும்.
  • ஒரு வகுப்பறையில் போதிய சமூக இடைவெளியுடன் மாணவர்கள் அமரும் வகையில் இடவசதி செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்திடல் வேண்டும்.
  • ஒவ்வாரு பள்ளியிலும் மாணவர் எண்ணிக்கை மற்றும் வகுப்பறைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப இடவசதி செய்யப்படுவதை உறுதி செய்திடல்
  • மாணவர் எண்ணிக்கை அதிகளவில் இருந்து வகுப்பறைகள் குறைவாக இருக்கும் நேர்வில் சுழற்சி முறையில் கற்றல் செயல்பாடுகள் நடைபெறுவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுருப்பதை உறுதி செய்திடல் வேண்டும்.
  • மாணவர்கள் சமூக இடைவளியை கடைபிடித்து போதுமான தொலைவில் அமர்ந்து படிப்பதற்கு ஏற்றவாறு வகுப்பறையின் தளத்தில் குறியீடுகள் போடப்பட்டிருப்பதை உறுதி செய்திடல் வேண்டும்.
  • பாடவேளையின் இடைவேளை மற்றும் மதிய உணவு இடைவேளையின்  போது ஆசிரியர்கள் முழு கவனத்துடன் மாணவர்களை கண்காணித்து வழிநடத்திட தேவையான நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும்.
  • மாணவர் மற்றும் ஆசிரியர்களின் பயன்பாட்டில் உள்ள கழிவறைகளின் உள்ளேயும் வெளியேயும் கைகளை சுத்தம் செய்வதற்கு ஏற்ற வகையில் போதுமான அளவில் சோப்பு அல்லது சோப்புக் கரைசல் திரவம் வைக்கப்பட்டு பயன்பாட்டில் இருப்பதை உறுதி செய்திடல் வேண்டும்.
  • பள்ளியில் உள்ள அனைத்து மின் சாதனங்கள் மற்றும் மின் சுவிட்ச்கள் நன்முறையில் செயல்படுகின்றதா என்பதை தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரிய  உறுதி செய்திடல்   வேண்டும்.
  • மாணவர்கள் பள்ளிக்கு காலையில் வருகை புரியும் போதும், பள்ளி முடிந்து மாலையில் வீடு திரும்பும் போதும் சமூக இடைவெளியை கடைபிடிப்பதையும் முகக் கவசம் அணிவதையும் உறுதி செய்திடல் வேண்டும்.
  • நடமாடும் மருத்துவக் குழு, ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் செவிலியர் ஆகியோரின் தொலைபேசி எண்கள் பள்ளியின் அறிவிப்புப் பலகையிலும்தலைமை சூசிரியர் அறையிலும் எழுதப்பட்டு இருப்பதை உறுதி செய்திடல் வேண்டும்.
  • அனைத்து ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாதப் பணியாளர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதை உறுதி செய்திடல் வேண்டும்.
  • மழைக் காலங்களில் பள்ளி வளாகத்தினுள் மழை நீர் தேங்காமல் இருப்பதையும் பள்ளங்கள் இல்லாமல் இருப்பதையும் உறுதி செய்திடல் வேண்டும் 
  • கொசுக்கள் உற்பத்தி ஆகாத வண்ணம் பள்ளிகளில் உரிய நடவடிக்கைகள்  மேற்கொள்ளவும், பள்ளி வளாகத்தின் தேவையான பகுதிகளில் கொசு மருந்து தெளித்து பள்ளி வளாகம் சுகாதாரமான சூழலில் செயல்படுவதை உறுதி செய்திடல் வேண்டும்.
  • பள்ளி வளாகத்தில் பழுதடைந்த கட்டிடங்கள் ஏதேனும் இருப்பின் மாணவர்கள் அங்கு செல்லாத வகையில் இருப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதை உறுதி செய்திடல் வேண்டும்.
  • மழைக் காலங்களில் நீர் கசிவினால் மின் கசிவு ஏதும் ஏற்படாதவாறு வகையில் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதை உறுதி செய்திடல் வேண்டும்.