DSE -BT Vacancy Detail As on 11.10.2021 


பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் ஆரசு / நகராட்சி / மாதிரி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 11.10.2021 அன்றைய  நிலவரப்படு நிரப்பத்தகுந்த பட்டதாரி - ஆசிரியர் காலிப்பணியிட விவரங்களை 12.10.2021 அன்று நடைபெறும் முதன்மைக் கல்வி அலுவலர்களின் கூட்டத்தில் ஒப்படைக்குமாறும் பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் (பணியாளர் தொகுதி) அவர்கள் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார் 

DSE -BT Vacancy Detail Proceeding 

பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் ஆரசு / நகராட்சி / மாதிரி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 11.10.2021 அன்றைய  நிலவரப்படு நிரப்பத்தகுந்த பட்டதாரி - ஆசிரியர் காலிப்பணியிட விவரங்களை தெரிவிக்க வேண்டும் என்றும் , காலிப்பணியிட விவரங்களை அணுப்பும்போது 01.08.2019பணியாளர் நிர்ணயத்தின்படி ஆசிரியரின்றி உபரி  பணியிடம் கண்டறிந்து இயக்குநரின் பொதுத் தொகுப்பிற்கு ஒப்படை க்கப்பட்ட பணியிடங்களை எக்காரணத்தைக் கொண்டும் காலிப்பணியிடங்களாகக் கொண்டு  வருதல் கூடாது என்றும் கூடுகல் தேவையுள் (Addl. Need Post) பள்ளிகளின் பெயர்களையும் காலிப்பணியிடங்களாகக் கருதக் கூடாது என  தெரிவித்துள்ளார்.

பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்களை இயக்ககத்திற்கு அனுப்பிய பிறகு கலந்தாய்வு நடைடுபறும் அன்றைய நாளில் எக்காரணத்தை கொண்டும் சேர்க்கை / நீக்கம் / திருத்தம் போன்றவைகளை மேற்கொள்ளக்கூடாத வகையில் சரியாகவும் துல்லியமாகவும் தரவேண்டும். என அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.