Guidelines For Refresher Course Model & Fun Activities


புத்தாக்கப் பயிற்சிக் கட்டகங்கள் & மனமகிழ்ச்சி செயல்பாடுகளுக்கான வழிகாட்டுதல்


தமிழகத்தில் கோவிட் - 19 பெருந்தொற்றுக் காரணமாக மார்ச் 2020 முதல் பள்ளிகள் மூடப்பட்டன. 9.12 ஆம் வகுப்புகளுக்கு 01.09.2021 முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது 

2021-2022 ஆம் கல்வி ஆண்டில் 1 ஆம் வகுப்பில் சேர்க்கப்பட்ட மாணவர்கள் 5 மாதம் கழித்து முதல் முறையாகப் பள்ளிக்கு வருகை தரவுள்ளனர் 

2020 - 2021 ஆம் கல்வி ஆண்டில் 1 ஆம் வகுப்பு சேர்க்கப்பட்ட மாணவர்கள் 2021 - 2022 ஆம் கல்வியாண்டில் 2 ஆம் வகுப்பு பாடங்களைக் கற்பதற்கான திறன்களை முழுமையாகப் பெறாமல் 2 ஆம் வகுப்பிற்கு வருகை தரவுள்ளனர். இதே போல மற்ற வகுப்பு மாணவர்கள் நீண்ட நாட்கள் பின்பு பள்ளிக்கு வந்து நேரடி வகுப்பில் கல்வி கற்ற  உள்ளனர் .

இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு மனமகிழ்ச்சி செயல்பாடுகளுக்கான வழிகாட்டுதல் , புத்தாக்கப் பயிற்சிக் கட்டகங்கள் மற்றும் முதன்மைப்படுத்தப்பட்ட பாடத்திட்டம் ஆகியவை மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ளன. 

மனமகிழ்ச்சி செயல்பாடுகளுக்கான வழிகாட்டுதல் ( இணைப்பு -1 )-Guidelines For Fun Activities


மாணவர்கள் 17 மாத இடைவெளிக்குப் பிறகு பள்ளிக்கு வருகை தருவதால் முதல் 10-15 நாள்களுக்கு கதை , பாடல் , விளையாட்டு , வரைதல் , வண்ணம் தீட்டுதல் , அனுபவப் பகிர்வு , கலந்துரையாடல் போன்ற மனமகிழ்ச்சி செயல்பாடுகளை வகுப்பறையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.


 Guidelines For Refresher Course Model - Fun Activities pdf


புத்தாக்கப் பயிற்சிக் கட்டகங்கள் ( இணைப்பு - II ) Guidelines For Refresher Course Model 


மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள கற்றல் இழப்பு மற்றும் கற்றல் இடைவெளியைக் கருத்தில் கொண்டு 2-8ஆம் வகுப்புகள் வரை புத்தாக்கப் பயிற்சிக் கட்டகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

எடுத்துக்காட்டாக : 
5 ஆம் வகுப்பிற்கான புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் ஆம் வகுப்பு வரையிலான அடிப்படைப் பாடக் கருத்துகள் மற்றும் 4 ஆம் வகுப்பிற்கான முக்கியப் பாடக்கருத்துக்களை உள்ளடக்கியதாக உருவாக்கப்பட்டுள்ளது

புத்தாக்கப் பயிற்சிக் கட்டகங்கள் கீழ்க்காணும் முறைகளில் செயல்படுத்த வேண்டும்.

 1 ஆம் வகுப்பு மாணவர்கள்

  • 1 ஆம் வகுப்பு மாணவர்கள் முதல் முறையாக பள்ளிக்கு வருகை தரவுள்ளதால் மனமகிழ்ச்சி வழிகாட்டுதலைப் பின்பற்றி குழந்தைகளின் மனவெழுச்சியை ஆற்றுப்படுத்தும் வகையில் செயல்பாடுகள் அமைய வேண்டும் . 
  • இதனை முடித்த பின்னர் முதன்மைப்படுத்தப்பட்ட பாடத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

2-5 ஆம் வகுப்பு மாணவர்கள்

  • 2-5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மனமகிழ்ச்சி செயல்பாடுகளுக்காள வழிகாட்டுதலைப் பின்பற்றி முதல் 10 - 15 நாள்களுக்குள் மனமகிழ்ச்சி செயல்பாடுகளை நடைமுறைப்படுத்த வேண்டும்
  • புத்தாக்கப் பயிற்சிக் கட்டகங்கள் 45-50 நாள்களுக்குள் முடிக்க வேண்டும் 
  • மாணவர்களுடைய கற்றல் அடைவு நிலைக்கேற்றாற்போல் காலஅளவை நீட்டிப்பதையும் முதன்மைப்படுத்தப்பட்ட பாடத்திட்டத்தை செயல்படுத்துவதையும் ஆசிரியர்களே முடிவு செய்து கொள்ளலாம்

6-8 ஆம் வகுப்பு மாணவர்கள்

  •  6. 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மனமகிழ்ச்சி செயல்பாடுகளுக்கான வழிகாட்டுதலைப் பின்பற்றி முதல் 10 - 15 நாள்களுக்குள் மனமகிழ்ச்சி செயல்பாடுகள் முடிக்க வேண்டும்.
  • புத்தாக்கப் பயிற்சிக் கட்டகத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். 
  • மாணவர்கள் வகுப்பிற்கேற்ற சுற்றல் அடைவு நிலையில் இருந்தால் புத்தாக்கப் பயிற்சிக் கட்டகத்தை மீள்பார்வைக்காக பயன்படுத்தி கொள்ளலாம் . 
  • மீள்பார்வைக்கான காலஅளவை  பள்ளி அளவிலேயே மாணவர்கள் நிலைக்கேற்ப முடிவு செய்து கொள்ளலாம். 
  • அதன்பின் முதன்மைப்படுத்தப்பட்ட பாடத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் மேற்காண் வழிகாட்டு நெறிமுறைகளை தவறாது பின்பற்றுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.