ஓய்வு பெறும் நாளில் அரசு பணியாளர்கள் தற்காலிக பணியிடை நீக்கம் என்ற நடைமுறை தவிர்க்கப்படும் - தமிழக அரசு உத்தரவு
Government Servants Avoidance of suspension on the last. date of. retirement Announcement made by the Hon'ble Chief Minister on the floor of Assembly under Rule 110 of the Tamil Nadu Legislative Assembly Rules-Orders issued.
HUMAN RESOURCES MANAGEMENT (N) DEPARIMENT G.O. (Ms.) No.111 Dated 11.10.2021
ஓய்வு பெறும் நாளில் அரசு பணியாளர்கள் தற்காலிக பணியிடை நீக்கம் என்ற நடைமுறை தவிர்க்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சட்டப்பேரவையில் விதி எண் 110ன் கீழ் முதலமைச்சர் வெளியிட்ட அறிவிப்பின் அடிப்படையில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஓய்வு பெறும் நேரத்தில் புகாருக்கு ஆளாகும் அரசு ஊழியர்கள் பற்றிய விசாரணையை குறித்த காலத்தில் முடிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
ஓய்வு பெறும் நாளில் அவர்களை பணிநீக்கம் செய்யக்கூடாது. அவ்வாறு செய்யப்படும் ஒரு சூழல் ஏற்படும் போது அதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். ஏனென்றால் தற்காலிக பணிநீக்கம் செய்யப்படும் போது அவர்களுக்கு சலுகைகள் அனைத்து கிடைக்காமல் போய்விடுகிறது. இதனை தவிர்க்கக்கூடிய வகையில் அந்த நடைமுறை மாற்றப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவிப்பை வெளியிட்டார். அதன் அடிப்படையில் அதறகான அரசாணை தற்போது வெளியிடபட்டுள்ளது.
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..