தெற்கு வங்க கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாற வாய்ப்பில்லை என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலடுக்கு சுழற்சியின் காரணமாக இன்று ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, புதுக்கோட்டை, நாகை ஆகிய 5 மாவட்டங்களில் கன முதல் மிக கன மழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகவில்லை என்றும், வரும் 29ஆம் தேதி அந்தமான் கடற்பகுதி அருகே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட மாவட்டங்கள்
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக காலையில் இருந்து திருவாரூரில் மழை பெய்து வரும் நிலையில்முன்னெச்சரிக்கை காரணமாக நாளை(26-11-2021) திருச்சி மேலும் கீழே கொடுக்கபட்டுள்ள மாவட்டத்திற்கு பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிப்பதாக அம்மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
- ராமநாதபுரம் மாவட்டம்
- மதுரை மாவட்டம்
- சிவகங்கை மாவட்டம்
- கள்ளக்குறிச்சி மாவட்டம்
- செங்கல்பட்டு மாவட்டம்
- காஞ்சிபுரம் மாவட்டம்
- திருவண்ணாமலை மாவட்டம்
- திருவள்ளூர் மாவட்டம்
கல்லூரி ,பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட மாவட்டங்கள்
அதேபோல் கனமழை காரணமாக திருநெல்வேலி , தூத்துக்குடி , புதுக்கோட்டை மேலும் கீழே கொடுக்கபட்டுள்ள மாவட்டத்திற்கும் நாளை (26-11-2021) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பதாக அம்மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
- திருநெல்வேலி மாவட்டம்
- தூத்துக்குடி மாவட்டம்
- புதுக்கோட்டை மாவட்டம்
- விருதுநகர் மாவட்டம்
- அரியலூர் மாவட்டம்
- தேனி மாவட்டம்
- திண்டுக்கல் மாவட்டம்
- பெரம்பலூர் மாவட்டம்
- தென்காசி மாவட்டம்
- தஞ்சாவூர் மாவட்டம்
- நாகபட்டினம் மாவட்டம்
- சென்னை மாவட்டம்
- திருவாரூர் மாவட்டம்
- விழுப்புரம் மாவட்டம்
- கன்னியாகுமரி மாவட்டம்
- மயிலாடுதுறை மாவட்டம்
- கடலூர் மாவட்டம்
- திருச்சி மாவட்டம்
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..