PG Appointment temporarily By PTA  

2018-19ஆம் கல்வியாண்டில் 1474 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களையும், 2019-20ஆம் கல்வியாண்டில் 2,449 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களையும், ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாகத் தொகுப்பூதியத்தில் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் அரசு , நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் நியமித்துக் கொள்ள அனுமதித்து அரசாணை எண் 226 நாள் 24.11.2021 வெளியிடப்பட்டுல்ளது 

PG ASST  VACANT DETAILS  PTA Thanjavur District  Pdf 

PG ASST  VACANT DETAILS  PTA Thiruvarur  District  Pdf 

PG ASST  VACANT DETAILS  PTA Trichy District  Pdf 

PG ASST  VACANT DETAILS  PTA villupuram District  Pdf 


PG ASST VACANT DETAILS PTA Vellour district 


கூடுதல் அறிவுரைகள் - PTA மூலம் தொகுப்பூதியத்தில் முதுகலை ஆசிரியர் நியமனம் - கூடுதல் அறிவுரைகள் வழங்கி பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு!! DATE 30.11.2021


Go No 226 Date 24.11.2021 - PG Appointment  From PTA


 2774 PTA PG Teachers  CSE Proceeding  Date -26.11.2021.pdf 

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 2774 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் தற்காலிகமாக நிரப்பிக்கொள்ள அனுமதி அளித்து பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு.

உபரி பணியிடங்களாக உள்ள  தகுதியுள்ள பட்டதாரி ஆசிரியர்களை மேல்நிலை வகுப்பிற்கு மாற்றுப்பணியில் நியமித்து விட்டு எஞ்சிய பாடங்களுக்கு  பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் நியமனம் செய்ய ஆணை வழங்கப்பட்டுள்ளது

இணைப்பு: மாவட்ட வாரியாக நிரப்பிக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்ட பாட வாரியான பணியிடங்கள் எண்ணிக்கை

Number of Posts Allowed To be filled district wise


1575 ஒப்பளிக்கப்பட்ட ஆசிரியர்  பணியிடங்கள் பாடவாரியாக பள்ளிகளின் பெயர் - மாவட்டம் வாரியாக


1575 PG vacent Details Subject Wise All District |GO Ms No.18 Dt 01.02.2021 - Annexure-II.pdf



2021- 2022ஆம் கல்வியாண்டில் அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் தற்போது 3,005 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை -1 பணியிடங்கள் காலியாக உள்ளன  ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 1,954 பணியிடங்கள் தெரிவு செய்து நிரப்பப்பட வேண்டும் என்றும், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நேரடியாக நிரப்பப்பட வேண்டிய காலிப்பணியிடங்களை நிரப்பிட ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் தெரிவு பட்டியல் ஏற்கனவே கோரப்பட்டுள்ளது . மீதமுள்ள 1051 பணியிடங்கள் பதவி உயர்வு மூலம் நிரப்பப்பட வவேண்டும் .

11-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களின் கல்வி நலன் கருதி, தற்போதுள்ள காலிப் பணியிடங்களில், முக்கிய பாடங்களான தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், தாவரவியல், விலங்கியல், பொருளியல், வரலாறு, புவியியல் மற்றும் வணிகவியல் பாடங்களுக்கு மட்டும் தேவையான 2774 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்களை முதுகலை பட்டதாரி ஆசிரியர் ஒப்பந்த அடப்படையில் நிரப்பப்பட வேண்டியது அவசியமாகிறது

அப்பதவிக்கான தகுதியுள்ளவர்களைக் கொண்டு, நபர் ஒருவருக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.10,000/-வீதம் தொகுப்பூதியத்தில். தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில்பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் நியமித்துக் கொள்ளாம்.


அந்தந்த பள்ளிகள் அமைந்துள்ள ஊர்கள் மற்றும் அருகாமையில் உள்ள பகுதிகளில் வசிக்கும் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பதவிக்கான தகுதி பெற்ற நபர்களைக் கொண்டு, சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியர், மேல்நிலைப் பிரிவிற்கான உதவித் தலைமையாசிரியர் மற்றும் மூத்த முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்ட குழு மூலமாக, ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக நிரப்பிக் கொள்வதற்கு  அனுமதி வழங்கப்படுகிறது.


அவர்கள் நியமனம் செய்யப்படும் நாளிலிருந்து ஐந்து மாதங்களுக்கு அல்லது நேரடி நியமனமாக ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் மற்றும் பதவி உயர்வு மூலம் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்பப்படும் வரை இவற்றில் எது முந்தியதோ அது வரையில் மட்டும் நிரப்பிக் கொள்வதற்கு பள்ளிக் கல்வி ஆணையருக்கு அனுமதி வழங்கப்படுகிறது.